தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 23 juni 2013

அரசுக்கு ஹக்கீம் வழங்கிய ஆதரவுக்கு பரிசாகவே தெரிவுக்குழுவில் நிராகரிப்பு! வெளியேற வேண்டும் என்கிறார் அசாத் சாலி!

வடமாகாண தேர்தல்! ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதன்மை வேட்பாளரை ஜனாதிபதியே தெரிவு செய்வார்!
[ ஞாயிற்றுக்கிழமை, 23 யூன் 2013, 08:02.20 AM GMT ]
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் செப்ரம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள முதலமைச்சர் வேட்பாளரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே தெரிவு செய்யவுள்ளதாக அரசாங்கத்தின் உயர் அமைச்சர்கள் மட்டத்திலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நேற்று கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த நேர்முகத் தேர்வை நடத்திய அமைச்சர்கள் குழாமே மேற்படி கருத்தை வெளியிட்டதாக இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட புலிகளின் முனனாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தேசிய பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மேற்படி நேர்முகத் தேர்விற்கு யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளர் தயா மாடர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநாகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ரெமீடியஸ் உட்பட வடக்கிலிருந்து பெரும்பாலானோர் கலந்துகொண்டுள்ளனர்.
ஆயினும் இதில் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டும் இருபது பேர் வரையானோர் கலந்து கொண்டதாக தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும் சிரேஸ்ட அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த மற்றும் அமைச்சர்களான ஏ.ஏச்.எம்.பௌஸி, மகிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட அமைச்சர்களும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும் இணைந்து இந்த நேர்முகத்தேர்வை நடத்தினர் என்றும் தயா மாஸ்டர் மேலும் கூறியுள்ளார்.
மேலும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தின் சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் ஜனாதிபதி மகிந்த ராஐபக்ஷவை சந்தித்திக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியையும் தயா மாஸ்டர் குறித்த செய்திக் குறிப்பில் மறுத்துள்ளார்.
அதே நேரம் இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனித்தோ அல்லது கூட்டாகவோ போட்டியிடுவது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறி முடித்துள்ளார்.

அரசுக்கு ஹக்கீம் வழங்கிய ஆதரவுக்கு பரிசாகவே தெரிவுக்குழுவில் நிராகரிப்பு! வெளியேற வேண்டும் என்கிறார் அசாத் சாலி!
[ ஞாயிற்றுக்கிழமை, 23 யூன் 2013, 08:56.09 AM GMT ]
முஸ்லிம்களைக் காட்டிக்கொடுத்து கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். அதற்கு பரிசாகவே அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸை நிராகரித்துள்ளது. எனவே வெட்கமிருந்தால் இவர்கள் அமைச்சுப் பதவிகளைத் துறந்து அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் திருத்தம் தொடர்பாக ஆராயும் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான ஆளம் கட்சி உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான 19 பேர் கொண்ட இக்குழுவில் அரசின் பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களான விமல் வீரவன்ச, சம்பிக்கர ரணவக்க, தினேஷ் குணவர்தன, டியூ குணசேகர, வாசுதேவ நாணயக்கார, முத்து சிவலிங்கம், டக்ளஸ் தேவானந்தா, ரிஷாத் பதியுதீன் மற்றும் ஏ.எல.எம்.அதாவுல்லா ஆகியோரின் பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ள போதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் எவரும் உள்வாங்கப்படவில்லை.
இவ்வாறு அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் சார்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பலர் இணைத்துக் கொள்ளப்பட்ட போதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
எனவே அவ்வாறான ஒரு அரசாங்கத்துடன் இவர்கள் ஏன் இணைந்திருக்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த அரசாங்கம் சிறுபான்மை சமூகங்கள் மீது எந்தவித அக்கறையும் இல்லாமலேயே செயற்படுகின்றது. அதற்கு சிறுபான்மை கட்சிகளைச் சேர்ந்தவர்களும் துணையாக இருப்பதுதான் கவலையளிக்கின்றது. அரசாங்கம் சிறுபான்மையினருக்கு அசாதாரணமிழைக்கின்றது என்ற காரணத்தினாலேயே நாம் முரண்பட்டுக்கொண்டு வெளியேறினோம்.
இன்று பலர் பதவிகளுக்காகவும் தமது தனிப்பட்ட தேவைகளுக்காகவும் தமக்கு வாக்கபளித்த மக்களைக் காட்டிக் கொடுத்து அரசுடன் இணைந்து சுகபோகங்களை அனுபவித்து வருகிறார்கள். இதனைச் சாதமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அரசாங்கம் தனது தேவைகளை சாதுரியமாக அரங்கேற்றி வருகிறது.
அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு துணை போகாமல் தமிழ், முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டும் நாட்டின் ஜனநாயகத்தினைக் கருத்திற் கொண்டும் சிறுபான்மையினத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten