[ ஞாயிற்றுக்கிழமை, 23 யூன் 2013, 09:29.22 AM GMT ]
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் யாழ். பரமேஸ்வராச் சந்தியில் தென்னிலங்கை மாணவர்களுக்கு இடையிலேயே இம்மோதல் இடம்பெற்றுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவப் பிரிவைச் சேர்ந்த 3ம் வருட மாணவர்களுக்கும் முதலாம் வருட மாணவர்களுக்கும் இடையிலேயே இம்மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தற்போது, குறித்த பகுதியில் இராணுவ பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இம்மோதல் சம்பவத்திற்கான காரணம் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுக்களிடையே மோதல்: 5 பேர் கைது! விசாரணை தொடர்கிறது
யாழ். பல்கலைகழகத்தில் மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் காரணமாக 5 பேரை இதுவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் மாணவர்களுக்கிடையே கை கலப்பு ஏற்பட்டுள்ளதாக இச்சம்பவத்தை அவதானித்தவர்கள் கூறுகின்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக பல்கலைக்ழக நிர்வாகத்தினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது இச்சம்பவம் தொடர்பாக எதுவும் கூறமுடியாது என மறுத்துள்ளனர். அத்தோடு பொலிஸாரிடம் வினாவியபோது விசாரணைமுடியும் வரை எதுவும் கூறமுயாது என தெரிவித்துள்ளனர்.
ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இலங்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 23 யூன் 2013, 09:13.19 AM GMT ]
இலங்கையை மிகவும் ஆபத்தான நாடாகப் பட்டியலிட்டுள்ள பிரித்தானியக் குடிவரவுத்துறை, அங்கிருந்து பிரித்தானியா வருவோரைக் கட்டுப்படுத்த இறுக்கமான நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது.
பிரித்தானியக் குடிவரவுத்துறையின் புதிய நடைமுறையின்படி, ஆறு ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு வருவோர் 3 ஆயிரம் பவுண்ட்சை பிணைப் பணமாகச் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவர்கள் நுழைவிசைவுக் காலம் முடிந்த பின்னரும் பிரித்தானியாவில் தங்கியிருந்தால் அந்தப் பிணைப் பணத்தை அவர்கள் இழக்க நேரிடும்.
இந்த புதிய நடைமுறை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஸ், நைஜீரியா, கானா ஆகிய நாடுகளுக்குப் பொருந்தும் என்று பிரித்தானிய உள்துறைச்செயலாளர் தெரெசா மே தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten