[ ஞாயிற்றுக்கிழமை, 23 யூன் 2013, 06:41.33 AM GMT ]
கடந்த வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதம ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதே இச் சம்பவம் நிகழ்ந்தது.
அப்போது அங்கு ஊடகத்துறை சார்ந்த ஒருவரால் ஜனாதிபதியிடம் ஒரு விடயம் கூட்டிக்காட்டப்பட்டது. ”ஜனாதிபதி அவர்களே! இலங்கை மின்சார சபை தொடர்பான செய்திகளைப் பெற்றுக் கொள்வது கடினமாக உள்ளதே” என ஊடகத்துறையைச் சார்ந்த ஒருவரால் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது.
உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ,
”கணேகலவே, ஊடகவியலாளர்கள் பிரச்சினை ஒன்றைக் கிளப்பியுள்ளார்கள். இதற்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். எனவே உடனடியாக அலரிமாளிக்கைக்கு வாருங்கள்” என தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலளித்த இலங்கை மின்சார சபையின் தலைவரான டபிள்யு. பி கணேகல, ” சரி மேடம். நான் வருகிறேன்” (ரைட் மேடம் மம என்னம்) என பதிலளித்துள்ளார்.
அவர் தன்னை அழைத்த விதம் குறித்து அதிர்ந்து போன ஜனாதிபதி, ”ஐயையோ இன்னும் மேடம்தானா?” (அனே..அனே.. தவம மேடம் நேத) மேடத்தைச் சந்திக்கவல்ல இப்போது வந்து என்னைச் சந்திக்கவும்” (மேடம் ஹம்புவன்ன நெவய் தன்ம எவித் மாவ ஹம்புவன்ன) என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் இதன் போது பெரும் சிரிப்பொலி ஏற்பட்டது.
பின்னர் தேநீர் பறிமாற்றம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, கணேகலவிடம் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
”என்னுடன் நீங்கள் பேசுவதற்கு முன்னர் மேடமுடன் பேசியிருந்தால் அந்த நினைவில் என்னையும் நீங்கள் மேடம் என நினைத்துப் பேசியிருக்கலாம்” என ஒரு போடு போட்டுள்ளார் ஜனாதிபதி மகிந்த.
இலங்கை வரும் நவநீதம்பிள்ளை முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் பேரழிவை நேரில் பார்வையிடுவார்!
[ ஞாயிற்றுக்கிழமை, 23 யூன் 2013, 06:33.42 AM GMT ]
ஓகஸ்ட் மாதம் இலங்கை வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை (நவிப்பிள்ளை) இறுதிப்போர் இடம்பெற்ற தமிழர்கள் பெரும் அவலத்தைச் சந்தித்த முள்ளிவாய்க்கால்ப் பகுதிக்கும் நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கைக்கான பயணம் பல தடவைகள் ஒத்திவைக்கப்பட்டு இப்போதே அதற்கு அனுமதி கிடைத்துள்ளது. ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை அவர் இலங்கையில் நிலைமைகளை அவதானிப்பார்.
இலங்கைப் பயணத்தின் போது கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஆகியோரை அவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி வடபகுதிக்கான பயணத்தை ஆரம்பிக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளார்.
மூன்று மாவட்டங்களிலும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை அவர் நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடுவார். இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களையும் சந்திப்பார்.
இந்தப் பயணத்தின்போது அவர் இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் செல்லவுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten