தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 24 juni 2013

இலங்கை தஞ்சக் கோரிக்கையாளர்கள் நாவுறு தீவுகளுக்கு மாற்றம்!

கொல்லப்பட்ட பம்பலப்பிட்டி வர்த்தகரின் கைத்தொலைபேசி புளுமென்டல் கால்வாயிலிருந்து மீட்பு!
[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 01:03.37 AM GMT ]
பம்பலப்பிட்டியில் கொலை செய்யப்பட்ட வர்த்தகரின் கைத் தொலைபேசி நீருக்கடியில் இருந்து நீரடி நீச்சல் பிரிவினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. புளுமென்டல் வீதியிலுள்ள கால்வாயில் நேற்று தேடுதல் மேற்கொண்ட போதே மேற்படி கைத்தொலைபேசியின் பாகத்தினை கண்டுபிடித்துள்ளனர்.
கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது இந்த வழக்கில் மேலும் திருப்பத்தை தரும் என குற்றப் புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.
இக்கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் உட்பட பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வழங்கிய தகவலுக்கமையவே மேற்படி கைத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

இலங்கை தஞ்சக் கோரிக்கையாளர்கள் நாவுறு தீவுகளுக்கு மாற்றம்
[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 04:01.27 PM GMT ]
இலங்கை தஞ்சக் கோரிக்கையாளர்களில் சிலர் அவுஸ்திரேலியாவின் நாவுறு தீவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.
இவர்கள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து விமானம் மூலம் நாவுறு தீவுகளுக்கு அனுப்பபட்டுள்ளனர்.
இலங்கையர்களுடன் வியட்நாம், லெபனான் நாட்டவர்களும் உள்ளடங்கியிருந்தனர்.
இவர்கள் நாவுறு தீவுகளுக்கு மாற்றப்பட்டதன் மூலம் சட்டவிரோதமாக நாட்டுக்குள் வருவோருக்கு கடுமையாக எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரம் குறிப்பிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten