[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 02:45.54 PM GMT ]
பல்கலைக்கழத்தில் பிரவேசிக்கும் புதிய மாணவ மாணவியருக்கு உளப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
உயர்கல்வி அமைச்சும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் இணைந்து இந்த நடவடிக்கைகயை எடுக்க உள்ளன. எவ்வாறான பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து நிபுணர்களிடம் ஆலோசனைப் பெற்றுக்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் பௌத்த பிக்குகளுக்கு வாகன சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதைத் தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவை ரத்துச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவொன்றை தொடர்ந்தும் விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அண்மைக்காலமாக பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற சம்பவங்களின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மாணவ மாணவியருக்கு உளப் பரிசோதனை நடாத்துவது உசிதமானதென கருதுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் ஷெனுகா ஹிம்புரேகம தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் உடல் தகுதிகளைப் போன்றே உள நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
புத்த பிக்குகளுக்கு சாரதி அனுமதி பத்திரம் வழங்கத் தடை! ரத்துச் செய்யக் கோரி வழக்கு
[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 03:00.12 PM GMT ]
வஷ்கடுவ ஷாக்கியமுனி விகாரையின் தலைமை பிக்கு பரகொட விமலவன்ஸ தேரர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
பிக்குகள் வாகனங்களை ஓட்டக்கூடாது என்று புத்த பகவான் எந்தத் தடையையும் விதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மற்றைய நாடுகளில் புத்த பிக்குகளுக்கு சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படுவதாகவும், இலங்கையில் பிக்குகளுக்கு அனுமதி பத்திரம் வழங்காமலிருக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தின் மூலம் தனது உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் விமலவன்ஸ தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையென்று அரசதரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் ஆட்சேபம் தெரிவித்தார்.
ஆனால் இந்த ஆட்சேபத்தை நிராகரித்த நீதிமன்றம் மனுவை தொடர்ந்து விசாரிப்பதற்கு அனுமதியளித்ததாக விமலவன்ஸ தேரர் பிபிசியிடம் தெரிவித்தார்.
வீதிக்கு சென்றால் பஸ் நிறுத்துவதில்லை. பஸ்ஸில் ஏறினால் சீட் கிடைப்பதில்லை. இப்படியான பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் பிக்குகளுக்கு சாரதி அனுமதி பத்திரம் வேண்டும் என்கிறோம் என்றார் பரகொட விமலவன்ஸ தேரர்.
கௌதம புத்தர் இன்று இருந்தால் அவரும் எமது வேண்டுகோளை ஆதரிப்பார் என்றும் அவர் கூறினார்.
அடுத்த கட்ட விசாரணை வரும் அக்டோபர் 22-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten