தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 24 juni 2013

தமிழ் பெண்ணை உதைந்தவர் முதற்கொண்டு பலர் அடையாளம் காணப்பட்டனர் !



லண்டன் ஓவல் மைதானத்தில் ஈழத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய சிங்களக் காடையர்கள் பலர், அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களது சிங்கள நண்பர்கள் வட்டாரமும் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த 18ம் திகதி லண்டன் ஓவல் மைதானம் முன்னதாக அமைதியாக கவனயீர்ப்பு போராட்டம் நடத்திய ஈழத் தமிழ் மாணவர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் நடத்தி இருந்தார்கள். தமிழ் மாணவி ஒருவரை காலால் உதைந்தும் காயப்படுத்தினார்கள். இவர்களில் பலரை ஒரு சிங்கள இணையம் அடையாளம் கண்டுபிடித்துள்ளது. இவர்களின் பெயர்களையும் அது வெளியிட்டுள்ளதோடு அவர்கள் லண்டனில் என்ன செய்கிறார்கள் என்பது போன்ற விடையங்களை அது வெளியிட்டுள்ளது.

இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், லண்டனில் தமிழரை தாக்கிய அந்தச் சிங்களவர்களில் ஒருவர் தமிழர் ஒருவரின் பெற்றோல் ஸ்டேஷனில் தான் வேலைசெய்கிறார் என்பது. மற்றுமொரு நபர் டி.ஜே செய்துவருகிறார். (அதாவது விழாக்களுக்கு பாட்டுப்போடுவது) இவ்வாறு தமிழர் வியாபார நிலையங்களில் வேலைபார்த்துக்கொண்டு தமிழர்களையே எட்டி உதைக்கிறது இந்தச் சிங்களம். மேற்படி தமிழருக்குச் சொந்தமான பெற்றோல் ஸ்டேஷனில் வேலைபார்த்த அச் சிங்களவரை வேலையால் நிறுத்தியுள்ளார் அத் தமிழர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். லண்டனில் பல தமிழர் வியாபாரஸ்தலங்களில் சிங்களவர்கள் பலர் வேலைசெய்து வருகிறார்கள். இவர்களுக்கு இனி என்ன நடக்கும் ? அதனை தமிழர்களே முடிவெடுக்கவும் வேண்டும்.



Geen opmerkingen:

Een reactie posten