தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 25 juni 2013

மஹிந்தவும், ஒபாமாவும் சமகாலத்தில் தான்சானியா பயணம்!- சந்திப்புக்கு வாய்ப்புண்டா?

சண்டேலீடர் பத்திரிகையை ஒழிப்பதற்கு பில்லிசூனியம் மேற்கொள்ளும் முயற்சியில் மேர்வின் சில்வா
[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 01:53.49 AM GMT ]
சண்டேலீடர் பத்திரிகையை ஒழிப்பதற்கு பில்லிசூனியம் மேற்கொள்ளும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் மேர்வின் சில்வா ஊடகவியலாளர்களிடம் பகிரங்கமாக ஒத்துக் கொண்டுள்ளார்.
தன்னைப் பற்றியும், தனது மகனான மாலக சில்வா பற்றியும் அவதூறான செய்திகளை சண்டேலீடர் பத்திரிகை தொடர்ந்து வெளியிட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், அதற்குத் தண்டனை பெற்றுத் தரும் நோக்கிலேயே பில்லி சூனியம் ஏவ நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கென அம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெலியத்தை பிரதேசத்தில் புகழ்பெற்ற பில்லி சூனியக்காரர்களை தான் நாடியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தானும், தனது மகனும் எந்தவிதமான தவறுகளும் செய்யாத நிலையில் சண்டே லீடர் அபாண்டமான செய்திகளை வெளியிட்டு, தங்கள் புகழைக் கெடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில் தங்களைப் பற்றி அவதூறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று ஊடகவியலாளர்களிடம் கெஞ்சுவதற்கோ, சாராயம் வாங்கிக் கொடுத்து நட்பை ஏற்படுத்திக் கொள்ளவோ தான் தயாரில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தான் எந்தவொரு நபரையும் எக்காரணம் கொண்டும் தாக்கப் போவதில்லை என்றும், இதுவரை யார்மீதும் தான் எந்தவொரு தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் தங்களைப் பற்றி அவதூறான செய்திகளை வெளியிடுவோருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என்பதன் காரணமாகவே தான் பில்லி சூனியக்காரர்களை நாடியிருப்பதாகவும், தவறு செய்தவர்களுக்கு சூனியம் மூலம் தகுந்த தண்டனை கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
மஹிந்தவும், ஒபாமாவும் சமகாலத்தில் தான்சானியா பயணம்!- சந்திப்புக்கு வாய்ப்புண்டா?
[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 12:54.56 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் சமகாலத்தில் தன்சானியாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரும் 26ம் திகதி தன்சானியாவுக்கு தனது பரிவாரங்களுடன் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அடுத்த மாதம் முதலாம் திகதி வரை அங்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள அவர், பின்னர் சீசெல்ஸ் தீவுகளுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும், ஆபிரிக்க நாடுகளுக்கான தனது உத்தியோகபூர்வ பயணத்தை நாளை மறுநாள் ஆரம்பிக்கவுள்ளார்.
முதலில் செனகல் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
பின்னர் அவர் வரும் ஜுலை 1ம் நாள் தன்சானியா பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
அந்த வகையில் ஜனாதிபதி மஹிந்தவும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் சமகாலத்தில் தன்சானியாவில் தங்கியிருக்கப் போகின்றனர்.
எனினும் முற்கூட்டிய இராஜதந்திர நிகழ்ச்சி நிரல் இல்லாத காரணத்தால் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே ஜனாதிபதி மஹிந்த சீனாவின் ஏற்பாட்டின்படியே தான்சானியா மற்றும் சீசெல்ஸ் தீவுகளுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தன்சானியா தற்போது சீனாவின் குடியேற்ற நாடு போலவே உள்ளது. இங்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ளதன் மூலம் தன்சானியாவை தனது குடியேற்ற நாடு போன்ற நிலைமைக்கு சீனா மாற்றிக் கொண்டுள்ளது.
அதே போன்று ஜனாதிபதி மஹிந்த அடுத்ததாக செல்லவுள்ள சீசெல்ஸ் தீவிலும் சீனாவின் கடற்படைத்தளம் செயற்படுகிறது.
தன்சானியாவிலும் சீசெல்ஸ் தீவிலும், சீனாவின் திட்டங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை அறிந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி மஹிந்த அந்த நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அந்த இணையத்தளம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten