[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 02:08.14 AM GMT ]
இதன் காரணமாகவே வடக்கு தேர்தல் குறித்து இந்தக் கட்சிகள் பீதியடைந்துள்ளன.
களுத்துறை பள்ளிவாசல் ஒன்றின் அருகில் வேண்டுமென்றே முஸ்லிம்களை வம்புக்கிழுத்த பொதுபலசேனாவின் தேரர்கள் உள்ளிட்ட காடையர் குழு, பிரதேச மக்களின் எதிர்ப்பு அதிகரித்ததையடுத்து அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெலஉறுமய கட்சிகளின் கருத்துக்கள் அரசாங்கத்தின் கருத்தாக அமையாது.
ஜாதிக ஹெல உறுமயவும், தேசிய சுதந்திர முன்னணியும் வடக்கில் சிங்கள அதிகாரம் தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமென விரும்புகின்றன.
இதன் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுகளை எட்ட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லங்கா சமசமாஜ கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறையில் முஸ்லிம்களை வம்புக்கிழுத்த பொதுபலசேனா!- பொதுமக்கள் திரண்டுவர தப்பியோட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 02:05.13 AM GMT ]
கடந்த சில தினங்களுக்கு முன் பசுமாடுகளை இறைச்சிக்காக அறுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கி பௌத்த தேரர்களின் பாதயாத்திரை ஒன்று ஆரம்பமானது.
இதற்குச் சமாந்திரமாக நேற்று பிற்பகல் களுத்துறை நகரில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்த பொது பல சேனா அமைப்பினர், நகரின் மையப்பகுதியில் பகிரங்கமாக அச்சுறுத்தும் போக்கில் நடந்து கொண்டனர்.
மேலும் அங்கிருந்த பள்ளிவாசல் ஒன்றின் அருகில் வீண்வம்பை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.
இதனையடுத்து களுத்துறையில் பெரும் பதற்றமான சூழல் உருவாகத் தொடங்கியது.
பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் பொதுபல சேனா அமைப்பினரை முற்றுகையிடும் நோக்கில் திரண்டு வரத் தொடங்கினர்.
எனினும் பொதுமக்களின் ஆத்திரத்தை தணிப்பதில் ஈடுபட்ட இஸ்லாமிய மதத்தலைவர்கள், பொதுபல சேனாவின் ஆத்திரமூட்டும் செயல்கள் தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தகவல் அளித்தனர்.
இதற்கிடையே தாம் எதிர்பார்க்காத அளவில் முஸ்லிம் பொதுமக்கள் திரண்டு வந்ததைக் கண்ட பொதுபல சேனா அமைப்பினர், தமது வாய்ச்சவடால்களைக் கைவிட்டு உடனடியாக அங்கிருந்து நழுவிச் சென்றனர்.
இதனையடுத்து பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட பதற்றம் படிப்படியாகத் தணிந்தது.
எனினும் இவ்வளவு பிரச்சினைகளின் மத்தியிலும் களுத்துறை பொலிசார் அமைதியை பாதுகாப்பதில் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten