தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 24 juni 2013

ஊட்டியில் இலங்கை சிப்பாய்களை விரட்டியடிக போராட்டம் !

மாத்தளை எலும்புக்கூடு: விசாரணை மேற்கொண்ட நீதவான் இடமாற்றம் !
24 June, 2013 by admin
மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளின் எச்சங்கள் குறித்த வழக்கு விசாரணைகளை நடத்தி வந்த மாத்தளை நீதவான் சத்துரிகா டி சில்வா, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவானாக அவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர் நாளை பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் சத்துரிகா மாத்தளை நீதவானாக சேவையாற்றி வருகின்றார். அதேவேளை மாத்தளை மனித புதைக்குழி குறித்து விசாரணை நடத்துவதற்காக கடந்த 20 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றையும் நியமித்தார். இந்த நிலையிலேயே மாத்தளை நீதவான் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஊட்டியில் இலங்கை சிப்பாய்களை விரட்டியடிக போராட்டம் !
24 June, 2013 by admin


உதகை(ஊட்டி) வெலிங்டன் படை கல்லூரியில் பயிற்சி பெறும் சிறீலங்கா வீரர்களை வெளியேற்றக் கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மானக்ஸா பாலம் வழியாக நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் வருவார்கள் என கூறப்பட்டதால் அந்த வழியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.இந்நிலையில் கண்டோன்மெண்ட் வழியாக படை கல்லூரிக்கு அருகே வந்த அவர்களை காவல்துறையினர் தடுத்தனர்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளு வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இதனால் ராணுவ சப்ளை டிப்போ சாலையில் நாம் தமிழர் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.மேலும் சிங்க கொடியையும் அவர்கள் தீவைத்து கொளுத்தினர்.இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே சிறீலங்கா படை வீரர்களுக்கு இந்தியாவின் எந்தப்பகுதியிலும் பயிற்சி அளிக்கக்கூடாது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ள நிலையில் நாளை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் நடத்தவுள்ளார்
மேலும் சிங்கள வீரர்களுக்கு பயிற்சியளிப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள வைகோ அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten