[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 07:37.18 AM GMT ]
இன்று அதிகாலை 1 மணியிலிருந்து மூன்று மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையில் சகல மக்களும் சீனாவின் அடிமைகளாகும் நிலை தோன்றியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
விஹாரைக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பௌத்த பிக்கு மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஆகிய இருவரின் வாய்களுக்கும் பிளாஸ்டரை ஒட்டிவிட்டே பெறுமதிவாய்ந்த ஐந்து சந்திரவட்டக்கற்களையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்திவருவதாகவும் தெரிவித்தனர்.
இலங்கையில் சகல மக்களும் சீனாவின் அடிமைகளாகும் அபாயம்!- ஐதேக எச்சரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 10:45.58 AM GMT ]
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.
சீனா இலங்கைக்கு நிபந்தனையின் அடிப்படையிலேயே கடனுதவிகளை வழங்குகின்றது.
நுரைச்சோலை அனல் மின்நிலைய கட்டுமான பணிகளை நிறைவு செய்து கொள்ள முடியாத அரசாங்கம், சீன வங்கியிடம் உதவி கோரியது.
அந்தக் கடனை திரும்பிச் செலுத்த காலதாமதமானதால் நுரைச்சோலை திட்டத்தை தமது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவர சீனா யோசனை கூறியுள்ளது.
இவ்வாறு அனைத்து தேவைகளுக்கும் நிபந்தனையில் கீழ் அரசாங்கம் சீனாவிடம் செல்கிறது.
இதனால் இலங்கை குடிமக்கள் அனைவரும் சீனாவின் அடிமைகளாகும் அபாயம் தோன்றியுள்ளது.
இலங்கையர்கள் விரைவில் சீனப் பிரஜைகளாக மாற்றமடைவார்கள் - திஸ்ஸ அத்தநாயக்க
இலங்கையர்கள் விரைவில் சீனப் பிரஜைகளாக மாற்றமடைவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களான நாம் மெதுமெதுவாக சீனக் கொலணியொன்றின் பிரஜைகளாக மாறி வருகின்றோம்.
அரசாங்கம் பாரிய நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ளது.
இவ்வாறான ஓர் நிலையில் இலங்கைக்கு மேலும் கடன்களை வழங்க சீனா முன்வந்துள்ளது.
மனித உரிமை சட்டம் ஒழுங்கு போன்ற காரணிகளினால் உலகின் பல நாடுகள் இலங்கைக்கு கடன் உதவிகளை வழங்கவில்லை.
எனினும், சீனா இலங்கைக்கு தொடர்ந்தும் கடன் வழங்கி வருகின்றது.
சீன வங்கிகள் நிபந்தனை அடிப்படையிலேயே இலங்கைக்கு கடனுதவி வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten