தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 juni 2013

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்குரிமை வழங்கும் சட்டமூலம்! உயர்நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகரிடம்..!

28 வருடங்களின் பின்னர் இலங்கை பாரிய முன்னேற்றம் கண்டுள்ளதாம்! இலங்கை உயர்ஸ்தானிகர்
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 11:03.55 AM GMT ]
28 வருடங்களின் பின்னர் இலங்கை பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளதாக பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உயர்ஸ்தானிகர் கிரிஸ் நோனிஸ், வெளிநாட்டு செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியில் இந்த கருத்தை வெளியிட்;டுள்ளார்.
இதில் பில்லியன் டொலர்கள் செலவில் 2 லட்சத்து 97 ஆயிரம் மக்கள் மீளக்குடியேற்றப்பட்ட செயற்திட்டம் நடத்தப்பட்டமையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு மரியாதை செலுத்த வேண்டும்.
இலங்கை தொடர்பில் மேற்கத்தைய நாடுகள் கொண்டிருந்த நிலைப்பாட்டில் தற்போது பாரிய மாற்றம் ஏற்பட்டு வருவதாகவும் கிரிஸ் நோனிஸ் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்குரிமை வழங்கும் சட்டமூலம்! உயர்நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகரிடம்..!
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 11:12.21 AM GMT ]
வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் பதிவு செய்து, அவர்களுக்கு வாக்குரிமை வழங்குவது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த விசேட சட்டமூலம், அரசியல் அமைப்பிற்கு ஏற்றதா? இல்லையா? என்பது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் குறித்த சட்டமூலம் தொடர்பான நீதிமன்றத்தின் நிலைப்பாடு குறித்த அறிய கடந்த தினத்தில் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பட்டது.
இதனை தொடரந்து அது பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழு இதனை விசாரணை செய்தது.
இதனை தொடர்ந்தே நீதிமன்றத்தில் நிலைப்பாடு சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி நிறைவடைந்த யுத்தத்திற்கு முன்னர் இவர்கள் இடம்பெயர்ந்ததாக, ஜனாதிகதி தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிடப்பட்;டிருந்ததது.

Geen opmerkingen:

Een reactie posten