தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 juni 2013

இலங்கை நிலைமைகள் குறித்து கண்காணித்து வருகின்றேன்!- முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 10:20.27 AM GMT ]
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை, கலைத்துறை மற்றும் முகாமைத்துறை பீடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த பீடங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விரிவுரைகள் மற்றும் பரீட்சைகள் இடம்பெறாது என்று கொழும்பு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
டெங்கு தொற்று நிலைமை காரணமாக அங்கு கல்வி செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பல்கலைக்கழகத்தில் சுத்திகரிப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை நிலைமைகள் குறித்து கண்காணித்து வருகின்றேன்!- முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 08:44.56 AM GMT ]
இலங்கை நிலைமைகள் குறித்து தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக சமாதான தூதுவரும், நோர்வேயின் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
தற்போது சமாதானத் தூதுவர் பதவி வகிக்காத போதிலும் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்திருந்த போது தமிழ் புலம்பெயர் மக்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான செய்திகளை வாசிப்பதாகவும், மக்களை சந்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten