தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 juni 2013

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் அம்மையார் இன்று கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம்!

மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சன் அம்மையார் இன்று செவ்வாய்க்கிழமை காலை கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து பல்கலைக்கழக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடினார்.
இச் சந்திப்பில் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்னன் கோபிந்தராஜா, பதிவாளர் கே.மகேசன், மற்றும் பீடாதிபதிகளும் கலந்து கொண்டனர்.
சந்திப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த உபவேந்தர் கலாநிதி கிட்னன் கோபிந்தராஜா, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், எதிர்கால வேலைத்திட்டங்கள், அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
அத்துடன், கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சமூகத்திற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்வது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
அதேநேரம், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மூன்று இன மாணவர்களையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகள், தேவைகள் பற்றியும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சன் அம்மையார் கேட்டறிந்து கொண்டார்.
மாணவர்கள், போக்குவரத்துப் பிரச்சினைகள், மற்றும் தங்களது பல்கலைக்கழகத் தேவைகள் குறித்து தூதுவருடன் பகிர்ந்து கொண்டனர்.

Geen opmerkingen:

Een reactie posten