[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 05:56.18 AM GMT ]
எனினும் தேர்தல் நடைமுறைகளின் படி ஜனாதிபதி, தேர்தல்கள் ஆணையாளருக்கு யூன் மாதத்திற்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும்.
அத்துடன் மாகாண சபை தேர்தல்கள் சட்டம் 1988ம் ஆண்டின் பிரிவு 2ன் படி, ஒரு மாகாணசபையில் முதன்முதல் மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் போது அதனை ஜனாதிபதி தேர்தல்கள் ஆணையாளருக்குக் கட்டளையிடுவார்.
அந்த அறிவிப்பு தேர்தல்கள் ஆணையாளரால் ஒரு வாரத்திற்குள் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும். அதன் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவேண்டும்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வடமாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவேளை, வடக்கு தேர்தல்கள் தொடர்பாக ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி போன்ற பல கட்சிகள் ஒன்றுக்கொன்று முரணான பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
த.தே.கூட்டமைப்பின் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினரை சுடுவோம் என மிரட்டிய இராணுவத்தினர்!
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 07:17.06 AM GMT ]
அக்கராயன் பிரதேசத்தில் உள்ள கண்ணகைபுரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் அரசாங்க நியமனம் பெற்ற ஆசிரியராக பணிபுரியும் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் தயாபரன், இன்று காலை மேற்படி பாடசாலையில் தனது வகுப்பில் கடமையில் இருந்தவேளை, வகுப்பறையில் நுழைந்த இரு இராணுவத்தினரால் பாடசாலை வாசலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு நின்ற அதிகாரியால் கடுமையாக மிரட்டப்பட்டதுடன், “தயாபரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சார்ந்தவரா எனவும் ஜனநாயக முறையில் ஆட்சி நடைமுறை மேற்கொள்ளப் போகிறீரா” எனவும் கேட்டு அச்சுறுத்தப்பட்டார்.
அதற்குப் பதிலளிக்க தயாபரன் முனைந்தபோது “ சுட்டுப் போடுவோம்” என துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து அகன்று மேற்படி பாடசாலையிலுருந்து சற்றுத் தூரத்திலுள்ள கடையொன்றில் தரித்து நின்றுள்ளனர்.
கடந்த 31.05.2013 அன்று அக்கராயன் பிரதேசத்தில் கண்ணகைபுரம் கிராமத்தில் சு.தயாபரனால் மேற்கொள்ளப்பட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடனான மக்கள் சந்திப்பினையடுத்தே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten