தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 juni 2013

இலங்கையில் ஆட்கடத்தல் சம்பவங்கள் பாரிய சிக்கலாக உருவாகியுள்ளது!- ஹக்கீம்

யாழ்.பாஷையூரில் இரவிரவாக அமைக்கப்படுகின்றது பாரிய படைமுகாம்!- மக்கள் அச்சத்தில்
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 03:06.02 AM GMT ]
யாழ்ப்பாணம் பாஷையூரில் மக்கள் முன்னேற்றக் சனசமூக நிலையம் அடங்கலாக அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமில் அவசர அவசரமாக நிரந்தரக் கட்டிடங்கள் அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
1995 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இராணுவ நடவடிக்கையின் போது இப்பகுதியில் கடற்பகுதியின் பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன.
ஆயினும், காலப்போக்கில் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டதோடு ஏனைய பகுதிகளை தொடர்ந்தும் இராணுவத்தினர் தம்வசம் வைத்திருந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியிலுள்ள இராணுவ முகாமை முற்றாக அகற்றுமாறு மக்கள் கோரி வந்த நிலையிலேயே இப்போது பாரிய முகாம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இரவு இரவாக பாரிய மின்குழிகள் போடப்பட்டு மரங்கள் அகற்றப்பட்டு சீமெந்தினாலும் பாரிய கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன.
இதேவேளை இப்பகுதிகளை விட்டு இராணுவத்தை வெளியேற்றி தமது பகுதிகளை திரும்ப பெற்றுத் தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் ஆட்கடத்தல் சம்பவங்கள் பாரிய சிக்கலாக உருவாகியுள்ளது!- ஹக்கீம்
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 03:23.07 AM GMT ]
இலங்கையில் ஆட்கத்தலுக்கு உள்ளாகுதல் என்பது பாரிய சிக்கலாக மாறி வருவதாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஆட்கடத்தல் செயற்பாடுகளை தடுப்பதற்காக அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் இணைந்து, பாலி திட்டத்தின் கீழ் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளின் அனுமதியை மீறி, வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக மனிதர்களை கொண்டு சென்று பிரவேசிக்க செய்வது சட்ட விரோதமாகும். அத்துடன் படகுகள் மூலம் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடல்மார்க்கமாக செல்வது உயிராபத்து நிறைந்த ஒரு விடயம்.
இந்த நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் இலங்கையில் தற்போது நடைமுறையில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten