தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 juni 2013

19ம் திருத்தச் சட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தத் தயார்!- சம்பிக்க ரணவக்க (செய்தித் துளிகள்-4)


யாழ்.பாஷையூரில் இரவிரவாக அமைக்கப்படுகின்றது பாரிய படைமுகாம்!- மக்கள் அச்சத்தில்
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 03:06.02 AM GMT ]
யாழ்ப்பாணம் பாஷையூரில் மக்கள் முன்னேற்றக் சனசமூக நிலையம் அடங்கலாக அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமில் அவசர அவசரமாக நிரந்தரக் கட்டிடங்கள் அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
1995 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இராணுவ நடவடிக்கையின் போது இப்பகுதியில் கடற்பகுதியின் பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன.
ஆயினும், காலப்போக்கில் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டதோடு ஏனைய பகுதிகளை தொடர்ந்தும் இராணுவத்தினர் தம்வசம் வைத்திருந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியிலுள்ள இராணுவ முகாமை முற்றாக அகற்றுமாறு மக்கள் கோரி வந்த நிலையிலேயே இப்போது பாரிய முகாம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இரவு இரவாக பாரிய மின்குழிகள் போடப்பட்டு மரங்கள் அகற்றப்பட்டு சீமெந்தினாலும் பாரிய கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன.
இதேவேளை இப்பகுதிகளை விட்டு இராணுவத்தை வெளியேற்றி தமது பகுதிகளை திரும்ப பெற்றுத் தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

19ம் திருத்தச் சட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தத் தயார்!- சம்பிக்க ரணவக்க (செய்தித் துளிகள்-4)
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 02:31.49 AM GMT ]
மாகாணசபை அதிகாரங்களை ரத்து செய்யும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட உள்ள 19ம் திருத்தச் சட்டம் குறித்து அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார்.
மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் இந்த உத்தேச சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
13ம் திருத்தச் சட்டத்தின் பல்வேறு சரத்துக்களில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பி மற்றும் முன்னணி சோசலிச கட்சி இயல்பாகவே கரைந்து போகும்- எஸ்.பி.
ஜே.வி.பி மற்றும் முன்னணி சோசலிச கட்சி இயல்பாகவே கரைந்து போய்விடும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு கட்சிகளையும் கரைக்க வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. இந்த இரண்டு கட்சிகளும் நாட்டின் பல்கலைக்கழகங்களின் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சித்தன.
இந்த முயற்சி தோல்வியடைந்தது. அவர்களுக்குத் தேவையான வகையில் துள்ளுவதற்கு இடமளிக்கப் போவதில்லை.
குறித்த கட்சிகளின் மெய்யான நிலைமையை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அரசாங்கம் தலையீடு செய்து இந்த கட்சிகளை அழிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துறைமுக தீப்பரவலுக்கு காரணமான நிறுவனத்திற்கு எதிராக வழக்கு
கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட தீப்பரவலுக்கு காரணமாக தனியார் நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன இதனை அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்தின் களஞ்சிய தளம் ஒன்றில் தீப்பற்றி இருந்தது. இதனால் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்திற்கு தனியார் நிறுவனம் ஒன்று இறக்குமதி செய்து வைத்திருந்த இரசாயன பொருள் ஒன்றே காரணம் என்றும் இது குறித்து குறித்த நிறுவனம் அதிகாரிகளுக்காக அறிவிக்காதிருந்தமையே, தீப்பரவலை தடுக்க முடியாமல் போனது என்றும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தல் ஏனைய மாகாணசபைகளுக்கும் நன்மை ஏற்படுத்தும்- ஆங்கில ஊடகம்
வடமாகாண சபைத் தேர்தல் பல்வேறு மாகாணங்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்க்கும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
வடக்கில் இன்னும் குடியேற்றப்படாத பல இடம்பெயர்ந்தவர்கள் வாழ்க்கின்றனர். பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சூழ்நிலையில் அந்த மக்கள் வாழ்க்கை நடத்துகின்றனர்.
குறிப்பாக வடக்கில் இருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களில் பலர் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.
வடக்கில் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் இவ்வாறான பல்வேறு பிரச்சினைகள் தீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்த நிலையில் அவற்றோடு வழிவந்த விடயமாக, ஏனைய மாவட்டங்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படலாம் என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
நிதி கையாள்கை மற்றும் காணிப் பிரச்சினைகள் தொடர்பான அதிகாரப் பரவலாக்கல் சார்ந்த விடயங்களில் இந்த தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten