13வது திருத்தத்தை பலவீனப்படுத்தினால் அரசில் இருந்து வெளியேறுவோம்! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எச்சரிக்கை!
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 01:38.41 AM GMT ]
இதுகுறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் ரபீக் ரஜாப்தீன் கருத்து வெளியிடுகையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் சபை இது குறித்து நேற்று முன்தினம் விவாதித்தது.
அதிகாரப்பகிர்வைப் பலவீனப்படுத்தும் எத்தகைய முயற்சிகளுக்கும் அரசுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்று அதில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
புலிகளின் ஐந்தரை கோடி ரூபா சொத்துக்களை முடக்க விசாரணைகள்
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 02:20.56 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐந்தரை கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை முடக்குவதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாத தடைப் பிரிவினரால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச ரீதியில் அமைப்பை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த நிதி திரட்டப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட புலிகளின் சர்வதேச வலையமைப்பு உறுப்பினர் ஒருவரிடம் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த சொத்து விபரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இரண்டு வெளிநாட்டு வங்கிகளில் இந்த பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. இதில் டுபாய் வங்கியொன்றில் வைப்புச் செய்யப்பட்ட பணம் ஏற்கனவே மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணைக்கும் நோக்கில் இவ்வாறு பணம் திரட்டப்படுவதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, புலிகளுக்கு சொந்தமான 594 ஏக்கர் மரமுந்திரி தோட்டம், 400 ஏக்கர் பழத் தோட்டம், 17 ஏக்கர் முந்திரி தோட்டம் ஆகியவற்றை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten