தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 juni 2013

கோட்டபாய கடத்தினார் மகளை: நமாலிடம் நீதி கேட்ட தாய் !



கோட்டபாய கடத்தினார் மகளை: நமாலிடம் நீதி கேட்ட தாய் !
02 June, 2013 by admin

கடந்த ஜனவரி மாதம் முதல் தனது மகளைக் காணவில்லை என்று சொல்லி, யாழ் சென்ற நமால் ராஜபக்ஷவிடம் தமிழ் தாயார் ஒருவர் கதறி அழுதுள்ளார். இன்று ஞாயிற்றிக்கிமை வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற பட்டதாரிகள் மாநாட்டை நிறைவு செய்துவிட்டு வெளியேவந்த, நாமாலிடம் இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார். தனது மகள் கிளிநொச்சியில் உள்ள சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தில் கடமையாற்றி வந்ததாகவும் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இவர் காணாமல் போயுள்ளதாகவும் இது குறித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை என்று அந்த தாயார் நாமலிடம் தெரிவித்தார்.

என்ன செய்வது என்று தெரியாது திண்டாடிய நமால் பின்னர், அங்கே நின்றிருந்த யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரை அழைத்து இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். இதில் வேடிக்கை என்னவென்றால் இப் பெண் காணமல் போது கிளிநொச்சியில், ஆனால் அவர் யாழ் மாவட்ட பொலிசாரை விசாரிக்கச் சொல்கிறார். கிளிநொச்சியில் தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் காணாமல் போவது, கோட்டபாயவின் புலனாய்வுத்துறையால் தான் என்பது யாவரும் அறிந்த விடையம். காணாமல் போன பெண்ணின் தாயார் கொடுத்த மகஜரை நமால் முறைக்கு கொண்டுபோய் தனது சித்தப்பாவிடம் தாக் கொடுத்திருக்கவேண்டும்.

இவர்கள் குடும்பமே தமிழர்களை கொலைசெய்தும், கடத்தி கப்பம் பெற்று வருகிறாரள், இன் நிலையில் அவர்களிடமே சென்று நீதிகேட்டுள்ளார் ஒரு தாய் !

Geen opmerkingen:

Een reactie posten