தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 juni 2013

சுட்டுக்கொல்லப்பட்ட 2 நபர்களின் உடல்கள் மயானத்தில் இருந்து மறைந்தது !



கடந்த ஜனவரி மாதம் மெடிகஹதென்னெ விமலவன்ச தேரரரை கொன்றார் என்ற குற்றத்துக்காக 2 பேரைப் பொலிசார் கைதுசெய்ய முற்பட்டார்கள். இதன்போது அவ்விரு சந்தேக நபர்களையும் பொலிசார் சுட்டுக்கொன்றார்கள். கடந்த ஜனவரி மாதம் 4ம் திகதி இவ்விருவரும் சுடப்பட்டு கொல்லப்பட்டார்கள். இருவரின் உடலங்களும் வாத்துவ பொது மயானத்தில் பின்னர் புதைக்கப்பட்டது. ஆனால் அவர்களது உடலங்களை தற்போது காணவில்லை என்று அவர்களது உறவினர்கள் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. 

மேற்படி இவ்விருவரின் உடலங்கள் மயானத்தில் இருந்து காணமல் போனதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்று உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். சந்தேக நபர்கள் இருவரையும் பொலிசார் சுட்டுக்கொன்றது தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கு இதுவரை முழுமைபெறாத நிலையில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் சந்தேகங்களத் தோற்றுவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten