வைகோ மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதம் தொடர்பாக இலங்கை அரசு பெரும் விசனமடைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதேவேளை தமது கடற்படைக் கப்பலில் வெளிநாட்டவர்கள் எவரும் இருக்கவில்லை என்று இன்றைய தினம் இலங்கை கடற்படையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். கச்சதீவுக்கு அருகாமையில் தாம் பாதுகாப்பு பணியில் மட்டுமே ஈடுபட்டுள்ளதாக இலங்கை கடற்படை இன்று தெரிவித்துள்ளது. தமது 12 க்கும் மேற்பட்ட படகுகள் அங்கே நிலைகொண்டுள்ளதை, இலங்கை கடற்படையினர் உறுதிசெய்துள்ளார்கள்.
இருப்பினும் வழமைக்கு மாறாக ஏன் அச் சிறிய தீவைச் சுற்றி , இலங்கை கடற்படை தனது பாதுகாப்பை அதிகரித்துள்ளது என்பது புரியாத புதிராகவே உள்ளது. சீன அதிகாரிகள் போர் கப்பலில் உள்ளதால் தான் சிறிய படகுகள் மூலம் அப் பகுதியை இலங்கை கடற்படையினர் பாதுகாத்து வருவதாக ஊர்ஜிதமற்ற சில செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. எது எவ்வாறு இருப்பினும், இலங்கையால் இந்தியாவுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் நிலவிவருகிறது என்பதே உண்மை நிலையாகும்.
Geen opmerkingen:
Een reactie posten