தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 juni 2013

ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு இலங்கை வருகிறது


ஐக்கிய நாடுகளின் குழுவுக்கு இலங்கையர் மீண்டும் தெரிவு
[ சனிக்கிழமை, 01 யூன் 2013, 02:12.47 AM GMT ]
இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் மீண்டும் ஐக்கிய நாடுகளின் புலம்பெயர் பணியாளர் குழுவின் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின்; புலம்பெயர் பணியாளர் குழு,14 நிபுணர்களை கொண்டது.
இவர்களின் பணிக்காலம் 4 வருடங்களாக இருக்கும். இந்தநிலையில்; புலம்பெயர் பணியாளர்களின் நலன்கள் அவர்களின் உறவினர்களது நலன்களுக்கு இந்தக்குழு பொறுப்பாக இருக்கும்.
உலகளாவிய ரீதியில் இன்று 175 மில்லியன் பேர் புலம்பெயர் பணியாளர்களாக உள்ளனர்.
எனினும் பல்லாயிரக் கணக்கானோர் சட்டவிரோதமாக உலகளாவிய ரீதியில் பணியாளர்களாக உள்ளனர் என்பது புள்ளி விபரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு இலங்கை வருகிறது
[ சனிக்கிழமை, 01 யூன் 2013, 02:33.19 AM GMT ]
ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றக் குழு ஒன்று இலங்கை வர உத்தேசித்துள்ளதாக பெல்ஜியத்தில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
பிரஸல்ஸுக்கு சென்றிருந்த இலங்கையின் தென்னாசிய குழுவின் உறுப்பினர்கள் விடுத்த அழைப்புக்கு இணங்கவே இந்த விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
5 விஜயத்தை மேற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கையின் தென்னாசிய குழுவில் இடம்பெற்றிருந்த பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையிலான குழுவினர் பலதரப்பட்ட விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

Geen opmerkingen:

Een reactie posten