தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 juni 2013

இலங்கை - சீனாவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடு! விபரம் வெளியிட சீன அதிகாரி மறுப்பு


மட்டக்களப்பில் மினி சூறாவளியால் 35 வீடுகள் சேதம்!- பா.உ அரியநேத்திரன் நேரில் சென்று பார்வையிட்டார்!
[ சனிக்கிழமை, 01 யூன் 2013, 02:45.50 AM GMT ]
மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் மினி சூறாவளியினால் 35 வீடுகள் சேதமடைந்தன.  பாதிப்புக்குள்ளான வீடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் நேரில் சென்று பார்வையிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு வீசிய மினிச் சூறாவளியினால் 35 வீடுகள் பாதிப்புக்குள்ளாகின.
இவற்றில் 5 வீடுகள் முற்றாக சேதத்திற்குள்ளாகியதுடன், வேள்ட் விசன் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட ஒரு முன்பள்ளியும் ஆலய கலையரங்கு ஒன்றும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.
இந்த பாதிப்புக்குள்ளான வீடுகளையும் பொது கட்டடங்களையும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன், குறித்த அனர்த்தம் சம்பந்தமாக நிவாரணம் வழங்கும் பொருட்டு மட். அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

இலங்கை - சீனாவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடு! விபரம் வெளியிட சீன அதிகாரி மறுப்பு
[ சனிக்கிழமை, 01 யூன் 2013, 03:03.03 AM GMT ]
இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்காக புதிதாக, 2.2 பில்லியன் டொலர் கடனுதவியை வழங்க முன்வந்துள்ள சீனா, இலங்கை இராணுவத்துக்கு பயிற்சிகளை வழங்கவும், பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை வழங்கவும் இணங்கியுள்ளது. 
இவ்விடயம் தொடர்பாக பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹொங் லீ, இருதரப்பும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ள இணங்கியுள்ளன.
பாதுகாப்புத் தொழில்நுட்பம், படையினருக்கான பயிற்சி, மற்றும் ஏனைய துறைகளில் தொடர்ந்தும் இரண்டு நாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சுக்களுக்கு இடையில் ஒத்துழைப்புகளை பரிமாறிக் கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியின் சீனப் பயணத்தின் போது, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பான உடன்பாடு தவிர, பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பான உடன்பாடு ஒன்றும் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதுபற்றி சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பிய போது, இலங்கையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகள் பற்றிய விபரங்களை வெளியிட மறுத்து விட்டார்.
இதனால் பாதுகாப்புத் தொடர்பாக சீனாவுடன் இரகசிய உடன்பாடு ஏதேனும் கையெழுத்திடப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
2ம் இணைப்பு
இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி அளிக்க முன்வந்த சீனா! உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு கடனும் அளிக்கிறது!
இலங்கை அதிபர் ராஜபக்ச சீன நாட்டுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொண்டார். இப்போது இரு தரப்புக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இது தொடர்பாக சீன அரசின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹாங் லீ, பெய்ஜிங்கில் நேற்று வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:�
சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான இராணுவ ஒத்துழைப்பு மேலும் வலுப்படும். இதற்கு ஏற்ற வகையில், இலங்கைக்கு இராணுவ தொழில் நுட்பம் வழங்கப்படும். அந்த நாட்டு இராணுவ வீரர்களுக்கு பயிற்சி தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அதே நேரத்தில் இலங்கைக்கும், சீனாவுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தங்கள் குறித்த எந்தவொரு தகவலையும் ஹாங் லீ வெளியிடவில்லை.
சீன�இலங்கை உறவுகள் குறித்து இலங்கை வெளியுறவு மந்திரி ஜி.எல். பீரீசும் பெய்ஜிங்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:�
இலங்கையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு சீனா 2.2 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 12 ஆயிரத்து 100 கோடி) புதிய கடன் தர முன்வந்துள்ளது.
கண்டியை யாழ்ப்பாணத்துடன் இணைக்கிற வகையில் வடக்கு அதிவிரைவு சாலை அமைப்பு பணிக்காக ஒன்றரை பில்லியன் டாலர்கள் (ரூ.8,250 கோடி) முதலீடு செய்ய இலங்கையும், சீனாவும் உடன்பட்டுள்ளன.
தெற்கு ரெயில்வேயை விஸ்தரிக்கவும் இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக வளர்ச்சிக்கும் இரு நாடுகளும் சம்மதித்துள்ளன. இவ்வாறு ஜி.எல். பீரீஸ் கூறினார்.
இலங்கை அதிபர் ராஜபக்சவின் சீனப் பயணத்தின் போது, செயற்கை கோள் தகவல் தொழில் நுட்பம், விண்வெளி தொழில் நுட்பம், கடல்சார் தொழில்கள் போன்றவற்றில் இலங்கைக்கு சீனா ஆதரவு தரும் என பிரதமர் லீ கெகியாங் உறுதி அளித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

Geen opmerkingen:

Een reactie posten