தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 juni 2013

முல்லை. ஒட்டுசுட்டான் பிரதேச செயலரின் செயற்பாடுகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள்


கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட தீவிபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டது
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 04:45.24 PM GMT ]
கொழும்பு துறைமுக  களஞ்சியப் பகுதி ஒன்றில் கடந்த 24ம் திகதி அதிகாலை ஏற்பட்ட தீப்பரம்பலுக்கான காரணம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
துரித கதியில் ஆவியாகும் தன்மையைக் கொண்ட இரசாயனத்தின் தாக்கம் தான் தீப்பரம்பலுக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை இன்றைய தினம் வெளியிட்டார் துறைமுக செயல்திட்ட அமைச்சர் ரோஹித்த அபயகுணவர்தன.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்....
இது குறித்து துரித கதியில் ஆவியாகும் தன்மையைக் கொண்ட இரசாயனங்களை இறக்குமதி செய்த நிறுவனம் சுங்கத்திற்கு அறிவிக்கவில்லை எனவும், அவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தால் அந்த இரசாயனப் பொருளை அதற்கேற்ற பாதுகாப்பான இடத்தில் களஞ்சியப்படுத்தி இருக்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், இந்த தீ விபத்தில் 55 கோடியே 60 லட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
முல்லை. ஒட்டுசுட்டான் பிரதேச செயலரின் செயற்பாடுகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள்
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 04:54.30 PM GMT ]
முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேச செயலரின் அரசியல் செல்வாக்கினால் கிறவல் குவாரி உரிமையாளர்களும், கனரக வாகன உரிமையாளர்களும் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகின்றது.
மேற்குறித்த பிரதேச செயலர் சொந்தமாக 5 டிப்பர் (கனரக வாகனம்) வைத்துள்ள நிலையில் அவற்றைக் கொண்டு மணல், கிறவல் மற்றும் மரம் போன்றவற்றை தென்னிலங்கைக்கும் உள்ளூரிலும் குறைந்த விலையில் விற்பனை செய்வதாக குற்றம்சாட்டப்படுகின்றது.
பிரதேசத்தில் தற்போது வீட்டுத்திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சாதாரண தொழிலாளிகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுவதுடன், மன்னார் மாவட்டத்தில் பிரதேச செயலாளராக இருந்த குறித்த பிரதேச செயலர், அமைச்சர் றிசாத்தின் பணிப்புரையின் பெயரில் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மணல் மற்றும் கிறவல் குவாரிகளை சொந்தமாக வைத்திருக்கும் பிரதேச செயலர், அங்கிருந்து பெற்றே மணலையும் கிறவலையும் ஏனைய வியாபாரிகளை விடவும் குறைந்த விலைக்கு விற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அனுமதியில்லாமல் பெறுமதியான காட்டு மரங்களும், பிரதேச செயலரின் வாகனத்தில் தென்னிலங்கைக்கு அரசியல் செல்வாக்குடன் கொண்டு செல்லப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்களை மக்கள் முன்வைக்கின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten