தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 8 juni 2013

அரசியல் தஞ்சம் கோரி வெளிநாடு சென்ற ஊடகவியலாளர்களை மீள அழைக்க முடியாது!- அரசாங்கம்


வெலிக்கடைச் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த 1000 கைதிகள் கண்டிக்கு மாற்றம்
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 03:04.34 AM GMT ]
வெலிக்கடைச் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த ஆயிரம் கைதிகள் கண்டி தும்பர சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐந்து ஆண்டுகளுக் மேல் தண்டனை விதிக்கப்பட்ட வேறு வழக்குகளில் ஆஜர் செய்ய வேண்டிய அவசியமற்ற கைதிகள் இவ்வாறு கண்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆயிரம் கைதிகளும் நாளை கண்டி தும்பர சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் உள்ள சன நெரிசலை தடுப்பதற்கும், சிறைச்சாலை காணிகளை அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் இவ்வாறு கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்யப்படுகின்றனர்.

அரசியல் தஞ்சம் கோரி வெளிநாடு சென்ற ஊடகவியலாளர்களை மீள அழைக்க முடியாது!- அரசாங்கம்
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 03:07.28 AM GMT ]
அரசியல் தஞ்சம் கோரி வெளிநாடு சென்ற ஊடகவியலாளர்களை மீள அழைக்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பிரிட்டன், நோர்வே, சுவீடன் போன்ற நாடுகளில் இலங்கை ஊடகவியலாளர்கள் அரசியல் தஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
குறித்த நாடுகளில் சுமார் 18 ஊடகவியலாளாகள் இவ்வாறு அரசியல் தஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
சில ஊடகவியலளார்கள் குறித்த நாடுகளுக்குச் செல்ல இராஜதந்திர வரப்பிரசாதம் காணப்பட்டதாகவும், அதற்கு அரசியல்வாதிகள் ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு வெளிநாடு சென்றவர்கள் அவர்களின் விருப்பமின்றி நாட்டுக்கு அழைக்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த ஊடகவியலாளர்களுக்கு அந்தந்த நாடுகள் கொடுப்பனவுகளை வழங்கி வருகின்றன.

Geen opmerkingen:

Een reactie posten