தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 8 juni 2013

13வது திருத்த சட்டத்தில் அரசின் யோசனைகளை பரிசீலிக்க ஈபிடிபி குழு நியமனம்!


புற்றுநோய் மருத்துவ உபகரணத் தொகுதி கையளிப்பு! அழையா விருந்தாளியாக நுழைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
[ வெள்ளிக்கிழமை, 07 யூன் 2013, 12:44.06 PM GMT ] [ உதயன் ]
யாழ். போதனா வைத்தியசாலையின் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அழையா விருந்தாளியாக அமைச்சர் ஒருவர் கலந்து கொண்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு கிழக்கு ரோட்டரிக் கழகத்தினால் யாழ். போதனா வைத்தியசாலை சிறுவர் புற்றுறோய் விடுதிக்கு நவீன வசதிகளுடனான கட்டில்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
காலை 11 மணிக்கு ரோட்டரிக் கழகத்தினால் குறித்த விடுதி வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் சப்பிரதாய பூர்வமாக கையளிக்கப்படவிருந்த வேளை திடீரென நுழைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடா வெட்டி திறந்து வைத்தார்.
இது குறித்து வைத்தியசாலை பணிப்பாளரிடம் கேட்டபோது, அமைச்சரை நாங்கள் அழைக்கவில்லை. அவரை ரோட்டரிக் கழகத்தினரே அழைத்துள்ளனர் என தெரிவித்தார்.
அதனையடுத்து ரோட்டரிக் கழகத்தினரிடம் வினவிய போது எங்களுடைய நிகழ்வுக்கு நாங்கள் எந்தவொரு அமைச்சரையும் அழைக்கவில்லை. நிகழ்வினை நாங்களே ஆரம்பிக்க இருந்தோம்.
அந்தவேளை வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதனையடுத்து திடீரென அமைச்சர் நிகழ்விற்குள் நுழைந்து நாடா வெட்டி திறந்து வைத்தார் என்றனர்.
இதேவேளை வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தினரிடம் இவ் விடயம் தொடர்பாக தொடர்பு கொண்டு கேட்ட போது, இது எமது நிகழ்வு அல்ல. தாம் அமைச்சருக்கு எந்த விதமான அழைப்பையும் விடுக்கவில்லை என தெரிவித்தனர்.
தொடர்ந்து அமைச்சரின் ஊடகப் பிரிவினருக்கு பல முறை தொடர்பு கொண்டும் தொடர்பினை ஏற்படுத்திக் கொடுக்க முடியவில்லை.
இதேவேளை உத்தியோக பூர்வமாக வைத்தியசாலை நிர்வாகத்தினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்புக்களிலும் அவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

13வது திருத்த சட்டத்தில் அரசின் யோசனைகளை பரிசீலிக்க ஈபிடிபி குழு நியமனம்!
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 02:34.22 AM GMT ]
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் மாற்றங்களை கொண்டுவரவிருக்கும் அரசாங்க யோசனைகளை பரிசீலிப்பதற்காக அரசாங்கத்தில் பங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி குழுவொன்றை நியமித்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.தேவராஜின் தலைமையிலேயே இந்தக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் யோசனைகளை பற்றி ஆராயவும், அவைகளால் ஏற்படக்கூடிய தாக்கங்களையும் பற்றி ஆராயவுமே இந்த குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
முன்னாள் போராளிக்குழுக்களில் ஒன்றான அவரது கட்சி 13வது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட பின், வன்முறைகளை கைவிட்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
அரசாங்கம் கொண்டுவரவிருக்கும் யோசனைகளின் பிரகாரம் மாகாண சபைகள் இரண்டோ அல்லது அதற்கு மேல் ஒன்றாக இணைந்து செயற்படவுள்ள அதிகாரத்தை ரத்து செய்வதோடு, மாகாண சபைகளுக்கு சம்பந்தமுள்ள விடயங்கள் தொடர்பான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் போது, அனைத்து மாகாண சபைகளின் அனுமதியை பெறவேண்டும் என்ற சட்ட நிபந்தனையை திருத்தி, மேலதிக வாக்குகளின் அடிப்படையில் அவை நிறைவேற்றப்படலாம் என்று திருத்தங்களை மேற்கொண்டுவரவுள்ளது.
இது தொடர்பில் ஆராய்வதற்கே ஈழ மக்கள் ஜனநாயக கட்சி குழுவொன்றை நியமித்துள்ளது.
இதைப்பற்றி கருத்து தெரிவித்த மாற்று கொள்கைகளுக்கான மையம் 'நாட்டின் சட்ட யாப்பு அனைத்து குடிமக்கள் தரும் அதிகாரத்தின் பிரகாரம் அனைத்து மக்களின் பிரதிபலிப்பாக இருக்கவேண்டும்,
ஆனால், தற்போதுள்ள திருத்தங்கள் ஜனநாய மரபுகளை மீறுவதாகவும் யுத்தத்தின் பின்னர் ஏற்பட வேண்டிய புரிந்துணர்வை அழிப்பதாகவும் உள்ளது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten