[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 03:08.57 AM GMT ]
சீனாவானது பழங்காலம் தொட்டே இலங்கையின் நெருங்கிய நண்பனாக இருந்து வருகின்றது. தாம் இலங்கையின் நட்பினை ஒருபோதும் மறக்கப் போவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்
நேற்று முன்தினம் இலங்கையின் பிரதமர் தி.மு. ஜயரத்னவை சீனாவின் யுனான் மாநிலத்தின் குன்மிங் நகரில் சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சீனாவின் சுயாதிபத்தியத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய எந்தவாரு சந்தர்ப்பத்திற்கும் இலங்கை துணைபோகவில்லை. திபத் தாய்வான் மற்றும் தென் சீனத் தீவுகள் சம்பந்தமான பிரச்சினைகளின்போது இலங்கை ஒரு நிலையான கொள்கையினைப் பின்பற்றி சீனாவுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக கூறிய உதவி சீனாவின் பிரதமர் ஐக்கிய மற்றும் பிளவுபடாத ஒரு சீனாவை கட்டியெழுப்புவதற்காக ஒத்துழைப்பு வழங்கியமைக்கா இலங்கை அரசுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கு சீனா உதவுவதாகவும் உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இலங்கையின் மூலப் பொருட்களை உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதற்கான சாத்திய வழிகள் பற்றிய ஆராய்வதாகக் கூறிய சீனாவின் உதவி பிரதமர் நேரடித் தொடர்புகள் மூலமாக இரு நாடுகளினதும் எதிர்காலம் கட்டியெழுப்பப்படும் எனவும் கூறினார்.
இலங்கையின் பிரதான அபிவிருத்தித் திட்டம் சீனாவின் மதிப்பீட்டுக்கு உட்பட்டுள்ளது. ஆசியாக் கண்டத்தின் தென் பிராந்தியத்தில் அமைந்துள்ள இலங்கை சீனாவின் நண்பன் எனவும் சீன உதவி பிரதர் அவர்கள் குறிப்பிட்டார்.
அமைச்சர் தி.மு. ஜயரத்ன இங்கு கருத்துத் தெரிவிக்கையில், 4 ஆம் நூற்றாண்டில் பாஹியன் பிக்கு சீனாவில் இருந்து இலங்கைக்கு வந்த காலத்தில் இருந்தே இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகள் ஆரம்பமானது. இந்த பிணைப்புக்குக் காரணம் பெளத்த தர்மம் ஆகும். எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க போன்ற அரச தலைவர்கள் சீனாவுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்ததாகவும் கூறிய பிரதமர் இலங்கையின் பாரிய அபிவிருத்தித் திட்டத்திற்கு சீனாவின் உதவி அத்தியாவசியமெனக் கூறினார்.
10 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்க்கும் இலங்கை அதில் சீன நாட்டவரின் வருகையையும் முக்கியமாக எதிர்பார்க்கின்றது.
30 வருட கால யுத்தத்தின் பின்னர் இலங்கை புதியதொரு திருப்பத்தினை அடைந்துள்ளதெனவும் அதன் முன்னோடி ஜனாதிபதி அதிமேதகு மஹிந்த ராஜபக்ச அவர்கள் எனவும் பிரதமர் கூறினார்.
13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கும்: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே அவசர சந்திப்பு
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 03:18.47 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் அவசர சந்திப்பு நடைபெறவுள்ளது.
மாகாணசபைத் திருத்தச் சட்டம் தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
கொழும்பில் இந்த விசேட சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தீர்மானத்திற்கு அமைய அதி உயர் பீடக் கூட்டமொன்றை கூட்டி இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஆதரவளிக்க மாட்டோம்: முஸ்லிம் காங்கிரஸ்
13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய ஆதரவளிக்க மாட்டோம் என ஆளும் கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
உத்தேச திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு எதிராகவே வாக்களிப்போம் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மாகாணசபை அதிகாரங்களை வலுவிழக்கச் செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் கொண்டு வரப்படும் இந்தத் தீர்மானம் காரணமாக தொடர்ந்தும் ஆளும் கட்சியில் நீடிப்பது குறித்தும் கவனம் செலுத்த நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் அடிப்படையில் கூட்டணியில் நீடிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வதே செய்திச் சேவையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten