தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 juni 2013

நீதிமன்ற உத்தரவை குற்றப்புலனாய்வு பிரிவினர் புறக்கணிப்பு!- காணாமல் போனவர்கள் குறித்து 70 பேர் முறைப்பாடு

பிரகீத் எக்னலிகொட எங்கே?- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பம்
[ திங்கட்கிழமை, 10 யூன் 2013, 03:03.48 AM GMT ]
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பிலான விசாரணைகளை இலங்கை அரசாங்க அதிகாரிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்ற சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
அதன் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் எடம்ஸ் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அருந்திகா பெர்ணான்டோ, ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட பிரான்ஸில் மறைவாக வாழ்வதாக தெரிவித்திருந்தார்.
தமது பாடசாலை நண்பரும், ஊடகவியலாளருமான வெடிவர்தனவினால் அவர் தமக்கு பிரான்ஸில் வைத்து அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், பின்னர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்திருந்தார்.
எனினும் தாம் யாரையும் அருந்திக பெர்ணான்டோவுக்கு அறிமுகப்படுத்தவில்லை என்றும், அவரை பிரான்ஸில் வைத்து சந்திக்கவே இல்லை என்றும் ஊடகவியாலர்ள வெடிவர்தன பீ.பீ.சி இணையத்தளத்துக்கு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் வழங்கிய தகவலின் படி, பிரகீத் எக்னலிகொட தொடர்பில் விசாரணை நடத்தி, அவர் குறித்த தகவல்களை அவரது உறவினர்களுக்கும், சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்த வேண்டும் என்று பிரட் எடம்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை குற்றப்புலனாய்வு பிரிவினர் புறக்கணிப்பு!- காணாமல் போனவர்கள் குறித்து 70 பேர் முறைப்பாடு
[ திங்கட்கிழமை, 10 யூன் 2013, 03:13.53 AM GMT ]
மாத்தளை நீதிமன்றத்தின் உத்தரவை குற்றப் புலனாய்வு தரப்பினர் புறக்கணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை வைத்தியசாலைக்கு அருகில் மீட்கப்பட்ட சடலங்களுக்கு சொந்தமானவர்களின் உறவினர்கள் தங்களின் முறைபாடுகளை முன்வைக்குமாறு அறிவுறுத்தி ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிடுமாறு நீதிமன்றம் குற்றப்புலானாய்வுத் தரப்பிற்கு உத்தரவிட்டிருந்தது.
எனினும் இதுவரையில் அவ்வாறான விளம்பரங்கள் எவையும் உள்நாட்டு ஊடகங்களில் வெளியாகவில்லை.
எவ்வாறாயினும், இது தொடர்பான முறைபாடுகளை ஜே வி பியின் மாத்தளை கிளை பதிவு செய்து வரும் நிலையில், அங்கு 70க்கும் மேற்பட்டவர்கள், ஜே வி பி உறுப்பினர்களாக இருந்து 1980களில் காணாமல் போனவர்கள் குறித்த முறைபாடுகளை பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஜே வி பியின் சட்டத்தரணிகளால் ஆராயப்பட்டு, இந்த முறைபாடுகள் அனைத்தும் மாத்தளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று N;ஜ.வீ.பி தெரிவத்துள்ளது.
 

Geen opmerkingen:

Een reactie posten