தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 juni 2013

பிரித்தானிய திரைப்படவிழாவில் காண்பிக்கப்படவுள்ள சனல் 4 தயாரித்துள்ள “நோ பயர் ஸோன்“

திருமலை நகரசபை ஒப்பந்தம் பற்றி அமெரிக்க தூதரகம் விளக்கம்!
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 12:39.09 AM GMT ]
திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது அந்தப் பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது என அமெரிக்கத் தூதரகம் நேற்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
திருகோணமலை பிரதேச மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்தும் உயரிய நோக்கிலேயே நாம் இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்டோம்.
இவ்வாறான எமது நோக்கம் அனைத்து மாணவர்களிடையேயும் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் தோற்றுவிக்கும்.
கடந்த ஆண்டு கண்டி பொதுநூலகத்திலும் பின்னர் 2011ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலும் இவ்வாறான நிலையங்களை நாம் உருவாக்கினோம்.
இந்த நிலையங்களை நாம் எந்த அரசியல் நோக்கத்துடனும் உருவாக்கவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த உடன்பாடு குறித்து, கிழக்கு மாகாண முதல்வர் அப்துல் மஜீத் இரண்டு தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
திருகோணமலை நகர முதல்வர் மற்றும், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசின் ஆகியோருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் குறித்து வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாக கிழக்கு முதல்வர் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய திரைப்படவிழாவில் காண்பிக்கப்படவுள்ள சனல் 4 தயாரித்துள்ள “நோ பயர் ஸோன்“
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 12:19.57 AM GMT ]
இலங்கை  அரசின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் பிரித்தானிய தொலைக்காட்சி நிறுவனமான சனல் -4 வினால் தயாரிக்கப்பட்ட “ நோ பயர் ஸோன்“ ஆவண திரைப்பட காணொளி  பிரித்தானிய திரைப்பட விழாவில் காண்பிக்கப்படவுள்ளது.
பிரித்தானியாவில் ஆரம்பமாகவுள்ள திரைப்பட விழாவில் எதிர்வரும் 14ம் திகதி இந்தக் காணொளி காண்பிக்கப்படவுள்ளது.
இந்தக் காணொளி முன்னர் பிரித்தானிய பாராளுமன்றம், ஜெனீவா மனித உரிமைப் பேரவை ஆகியவற்றிலும் மற்றும் இந்தியா உட்பட வேறு பல நாடுகளிலும் காண்பிக்கப்பட்டமை தெரிந்ததே.

Geen opmerkingen:

Een reactie posten