[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 02:28.32 AM GMT ]
13ம் திருத்தச் சட்டத்தின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டால் சிங்கள மக்கள் எதிர்ப்பை வெளியிடுவர் என பாரம்பரிய சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் இன்றி வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது பயனில்லை என கூட்டமைப்பினர் வலியுறுத்த உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுயாட்சி அதிகாரங்களை கைப்பற்றும் நோக்கில் கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாகவும், இதனை மாவை சேனாதிராஜா அண்மையில் வெளிப்படுத்தியிருந்ததாகவும் அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதேவேளை, 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் லண்டனில் தமிழ் கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சிங்கள மக்கள் எதிர்ப்பை வெளியிடுவர்!- அமைச்சர் டக்ளஸ்
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 06:06.24 AM GMT ]
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்புவதில்லை எனவும், நாட்டின் பிரச்சினைகளுக்கோ அல்லது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கோ தீர்வுகளை வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைப்பு காட்டத் தவறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டால் தங்களது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியாது என்ற காரணத்தினாலயே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு நடந்து கொள்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தங்களது அரசியல் இருப்பிற்காக பிரச்சினைகளை நீட்டிக்க வேண்டுமென்றே கூட்டமைப்பு விரும்புகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்கள் சமாதானமாக வாழ்வதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விரும்பவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு எதிர்ப்பை வெளியிட்டது, தற்போது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சிங்கள மக்கள் எதிர்ப்பை வெளியிடுவர் எனவும், அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் தமிழ் மக்கள் எதிர்ப்பை வெளியிடுவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென நாட்டின் சகல தமிழ் மக்களும் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten