யுத்த காலத்தில் இல்லாத இனவாதம், யுத்த முடிந்த இவ் இராட்சியத்தில் தலைவிரித்தாடுகின்றது!- சி. பாஸ்க்கரா
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 02:57.38 PM GMT ]
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் மக்களுக்கு விடுதலை, மக்களை காப்பாற்றுகின்றேன் என இலட்ச கணக்கில் தனது நாட்டு மக்களை கொன்ற நாளில் வெற்றி விழாவை கொண்டாடும் அரசு இன்னும் ஓர் அரசியல் தீர்வை சமர்ப்பிக்க எள்ளளவும் எண்ணாமல் ஒன்றுமில்லாத வடமாகாண தேர்தல் நடத்துவதாக அரசு கூறவும், கூட்டணிக் கட்சிகள் தேர்தல் வைப்பதை எதிர்த்து கூட்டம் போட்டு கூச்சல் இடுவதும் பாலுக்குக் காவல் பூனைக்கும் தோழன் போன்றுள்ளது.
இக்காலத்தில் போல் எக்காலத்திலும் இனவாதம் தலை விரித்தாடியது இலங்கையில் கிடையாது தர்ம புத்தரின் தர்ம போதனையான பஞ்ச சீலம் அட்டசீலம் போன்ற நல்ல சிந்தனையை நன்றாக படிக்காத இனவாத தேரர்களின் கைங்காரியங்கள் தலை விரித்தாடுவதும் அதனை ஒட்டி அரசின் பங்காளி கட்சியினர் 13வது ஒழிப்பு என கையெழுத்து வேட்டை, கூட்டம் நடாத்தி இனவாத செயற்பாட்டை கூட்டும் கைங்காரியங்களை அரசு தடுக்காமல் இருப்பதும்,
அரசு உலக நாடுகளுக்கும் தமிழ் மக்களுக்கும் தீர்வையும் தேர்தலையும் நடைமுறைப்படுத்துவதாக கூறுவதும் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடும் செயற்பாடாகவே உள்ளது.
அரசுநல்ல சிந்தனையில் நடக்க வேண்டுமானால் கௌதம புத்தர் வழியில் நடக்கும் கல்முனை சுபத்ராமய விகாராதிபதி சங்கரத்ன தேரர் கூறிய இலங்கை பௌத்தர்களுக்கு மாத்திரம் உரிய நாடு இல்லை என்ற அவரின் கருத்துப்படி அரசு சிந்தித்து நடக்குமாயின் ஜக்கிய இலங்கைக்குள் சகல இனத்தர்களும் சமமாக வாழும் சூழ்நிலை ஏற்படும்.
இல்லையேல் இனவாதச் சக்திகளின் சொற்படி கேட்டு அரசு நடக்குமாயின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தையும் நீக்கி தமிழ் மக்களுக்கு இருக்கும் “கோவனமான 13ஆவதையும் நீக்கிவிட்டால்” உலக நாடுகள் சிந்திப்பதற்கு வழியேற்படும். இவ் அவல நிலையை அரசு உன்னிப்பாக சிந்தித்து உரிய பரிகாரம் காணாது விட்டால் இக்கட்டான விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக போய்விடும்.
ஆண்டாண்டு காலமாக தமிழ் மக்களை நம்பவைத்து கழுத்தறுக்கும் செயற்பாடு பலதசாப்த காலமாக நடைபெற்றாலும் எனியும் இச்செயற்பாடு செயலுறும் என நினைத்தால் இக்காலத்துக்கும் பொருந்தும் என நினைப்பது யதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட செயற்பாடாகவே அமையும் என பாஸ்க்கரா தெரிவித்தார்.
பலரை ஏமாற்றிய முன்னாள் புலனாய்வு பிரிவு அத்தியட்சகருக்கு எதிராக 15 வழக்கு! 15 நாள் விளக்கமறியல்
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 12:06.07 AM GMT ]
மத்திய வங்கியில் கையிருப்பிலுள்ள தங்கத்தில் 100 கிலோகிராம் தங்கத்தை பெற்றுத் தருவதாக கூறி பலரை ஏமாற்றிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 11 நபர்களில் குறித்த நபர் 6வது சந்தேகநபராவார்.
அடுத்து, கனடாவில் வேலை பெற்றுத் தருவதாக கூறியே குறித்த சந்தேகநபரான ஆனந்த ரணசிங்க 2.6 மில்லியன் ரூபாவை பெற்று பலரை ஏமாற்றியுள்ளதாக கோட்டை மற்றும் கொம்பனி வீதி பொலிஸார் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறித்த சந்தேகநபர் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தேடி வந்தவர்களில் எட்டுப் பேரை ஏமாற்றி பணம் பெற்றதாக கோட்டை பொலிஸாரும், மேலும் 7 பேரை ஏமாற்றியதாக கொம்பனி வீதி பொலிஸாரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்துடன், 15 வழக்குகளிலும் குறித்த சந்தேகநபர் முக்கிய சந்தேகநபராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Geen opmerkingen:
Een reactie posten