தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 juni 2013

தெஹிவளை ரயில் குண்டு வெடிப்பு வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு சிறைத்தண்டனை

முன்னாள் கல்விப் பணிப்பாளர் குருகுலராசாவை அவமதிக்கும் வகையில் கிளிநொச்சியில் சுவரொட்டிகள்!
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 12:33.05 PM GMT ]
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் முன்னை நாள் கல்விப் பணிப்பாளரான திரு த. குருகுலராசா ( வயது 60)  அவர்களினைத் துவேசிக்கும் வகையில் சுவரொட்டிகள் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பாகங்களிலும் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இச்சுவரொட்டிகளை் இராணுவப் புலனாய்வாளர்களாலும் ஈபிடிபி ஒட்டுக்குழுக்களாலும் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
கடந்த 24.04.2013 அன்று காலை10 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் தென்மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான வெளியுறவு அலுவலர் லெஸ்லி ரெய்லர் அம்மையாருடனான சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் திரு சி. சிறீதரன் அவர்களுடன் திரு த. குருகுலராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.
அச் சந்திப்பின் போது வட பகுதியின் தற்போதைய நிலவரங்கள், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சசனைகள், வட மாகாணத் தேர்தல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
அதன் பின்னரே தமிழ் மக்கள் உரிமைகள் தொடர்பில் கூடிய அக்கறை கொண்டுள்ள இவரது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இத்தகைய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தெஹிவளை ரயில் குண்டு வெடிப்பு வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு சிறைத்தண்டனை
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 01:02.24 PM GMT ]
தெஹிவளையில் 1996ம் ஆண்டு இடம்பெற்ற ரயில் குண்டுவெடிப்புக்கான சதித்திட்டத்தில் பங்கெடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
வழக்கின் முதலாம், இரண்டாம் குற்றவாளிகளுக்கு 10 வருடங்கள் சிறைத்தண்டனையும், மூன்றாவது குற்றவாளிக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களான மக்ஸிலன், லோகநாதன், திருமகள் ஆகியோருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்க முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மூவரும் ஏற்றுக்கொண்டதையடுத்தே அவர்களுக்கு மேற்கண்டவாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தங்களுடைய கட்சிக்காரர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அதேவேளை, தங்களுடைய கட்சிக்காரர்கள் 16 வருடங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையினால் தண்டனையை குறைக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.
மூன்றாவது சந்தேகநபரான திருமகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி லக்ஷ்மன் பெரேரா, சந்தேகநபர் 16 வருடங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விளக்கமறியலில் இருக்கும் போது அவர் குழந்தையொன்றையும் பிரசவித்தார் என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன்  முதலாவது சந்தேகநபரே இவரின் கணவர் எனவும் சுட்டிக்காட்டியதுடன் குழந்தையை பராமரிப்பதற்கு எவரும் இல்லை என்றும் இவர்களின் நிலைமையை கவனத்தில் கொண்டு தண்டனையை குறைக்குமாறும் கோரிநின்றார்.
இவற்றை கருத்தில் கொண்ட நீதிபதி, வழக்கின் முதல் இரண்டு குற்றவாளிகளுக்கு தலா 10 வருடங்களும் மூன்றாவது குற்றவாளியான திருமகளுக்கு 5 வருடங்களும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அத்துடன், இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவர்களான சுகராஜா மற்றும் சுதர்ஷனன் ஆகியோரை குற்றவாளிகள் அல்லவென அறிவித்ததுடன் விசாரணையை வரும் செப்டெம்பர் மாதம் 11 ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
தென்பகுதிக்கு சென்று கொண்டிருந்த ரயிலில் 1996ம் ஆண்டு யூலை 27ம் திகதி தெஹிவளையில் வைத்து மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டதுடன் 400 பேர் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Geen opmerkingen:

Een reactie posten