[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 02:34.05 AM GMT ]
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது கூட்டத்தை இலங்கையில் நடத்துவது குறித்து மீண்டும் ஆராயவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சி கோரியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். வடக்கு மாகாணசபைத் தேர்தல் உட்பட்ட விடயங்களில் அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
2006ம் ஆண்டு முதல் 421 படை அதிகாரிகளும் 5205 படை வீரர்களும் முப்படைகளிலிருந்தும் இராணுவ நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டார்கள் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனவே அதனை கருத்திற் கொண்டு பொதுநலவாய நாடுகளின் மதிப்பை காக்கும் வகையில் இலங்கையில் அதனை நடத்துவதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 17 வது அரசியல்அமைப்பு திருத்தத்தை அமுல்செய்து நீதியான தேர்தலை நடத்த முன்வர வேண்டும் என்று மங்கள சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.
5,626 படை வீரர்கள் இதுவரை இராணுவ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்: அரசாங்கம்
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 02:29.47 AM GMT ]
சட்டத்தின் முன்னிலையில் சகலரும் சமம் என தெரிவித்த அவர் கே.பி.க்கு எதிராக குற்றச்சாட்டு இருந்தால் அதனைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இலங்கை இந்திய உடன்படிக்கையின் கீழ் பாரிய குற்றவாளிகளுக்கும் ஐ. தே. க. மன்னிப்பு வழங்கியது என தெரிவித்த அமைச்சர், தாய்நாட்டுக்கு எதிராக செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியினருக்குக்கூட அரசாங்கம் மன்னிப்பு வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் ஆட்சி ஏகாதிபத்திய ஆட்சியல்ல எனவும் ஜனநாயக ரீதியிலான ஆட்சியே தற்போது இடம்பெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அரசாங்க தரப்பு பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்கண்ட தகவலை வழங்கினார்.
கடந்த 2006ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் காலி கடற்படை முகாம் மீது புலிகள் தாக்கிய போது அப்படை முகாமிலிருந்த கொமடோர் டி.எம்.பி.மெண்டிஸும் இராணுவ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றார் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து மற்றுமொழு கேளிவியை எழுப்பிய ரவி கருணாநாயக்க எம்.பி, 'முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, இராணுவ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டடை தொடர்பில் ஏன் விளக்கமளிக்கவில்லை என்றார்.
இதற்கு பதிலளித்த தினேஸ் எம்.பி, 'அது பற்றி இன்னொரு கேள்வி உத்தியோகபூர்வமாக கேட்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten