[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 02:59.17 AM GMT ]
இலங்கையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தின் பேச்சாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்திக்க பெர்ணான்டோ, தமக்கு பிரான்ஸில் வசிக்கும் இலங்கை ஊடகவியலாளர் வெடிவர்த்தன என்பவர், பிரகீத் லியனகேயை அறிமுகப்படுத்தியதாக நாடாளுமன்றத்தில் வைத்து குறிப்பிட்டிருந்தார்.
எக்னெலிகொட, தலைமை மொட்டையடித்து ஆள் தெரியாத நிலையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எனினும் அருந்திக்கவின் தகவலை, ஊடகவியலாளர் வெடிவர்த்தன மறுத்திருந்தார்.
அருந்திக்க பொய் கூறுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையிலேயே பிரான்ஸ் தூதரகமும் தமது தகவலை வெளியிட்டுள்ளது.
இதேவேளை அருந்திக்கவின் தகவல் தொடர்பில் அவரிடம் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று பல்வேறு ஊடக நிறுவனங்களும் கட்சிகளும் அரசாங்கத்தை கோரியுள்ளன.
ஈழத்தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினையில் மாற்றாந்தாய் மனப்பான்மை: மத்திய அரசுக்கு அதிமுக கண்டனம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 02:57.54 AM GMT ]
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், 40 தலைமை செயற்குழு உறுப்பினர்கள், 9 மாவட்ட அவைத்தலைவர்கள் உள்பட 25 சிறப்பு அழைப்பாளர்கள், அமைச்சர்கள், மேயர்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் என மொத்தம் 297 பேர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மாலை 3.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் 5.15 மணி வரை நடைபெற்றது.
கூட்டத்தில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படாதது, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காதது போன்ற பாரபட்சமான நடவடிக்கைகளையும் எடுத்து வரும் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட மத்திய அரசுக்கு இச்செயற்குழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இவை உட்பட மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Geen opmerkingen:
Een reactie posten