தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 9 juni 2013

கிறிஸ்மஸ்தீவில் அகதிகள் படகு கடலில் மூழ்கியது!� இதுவரை 13 சடலங்கள் கண்டுபிடிப்பு!


திருகோணமலை அமெரிக்கன் கோணருக்கு கிழக்கு மாகாணசபை அனுமதி!
[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 02:23.49 AM GMT ]
சர்ச்சைக்குரிய வியடமாக பேசப்பட்ட திருகோணமலையின் அமெரிக்க நிலையத்துக்கு கிழக்கு மாகாணசபை அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் இயங்கும் திருகோணமலை நகர சபையுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ் இந்த நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
எனினும் இலங்கையின் வெளியுறவு அமைச்சுக்கோ கிழக்கு மாகாணசபைக்கோ அறிவிக்கப்படாத நிலையில் திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்க தூதரகம் செய்துக்கொண்ட உடன்படிக்கை சட்டவிரோதமானது என்று தெரிவித்து இந்த உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் இடைநிறுத்தியிருந்தது.
எனினும் அமெரிக்க தூதரகம் இலங்கை வெளியுறவு அமைச்சுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியதன் பின்னர் தற்போது அமெரிக்கன் நிலையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ்தீவில் அகதிகள் படகு கடலில் மூழ்கியது!� இதுவரை 13 சடலங்கள் கண்டுபிடிப்பு!
[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 01:53.04 AM GMT ]
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே கடந்த புதன்கிழமை மூழ்கிய படகில் இருந்த அகதிகளில் 13 பேரின் சடலங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதற்கு முன்னதாக அவுஸ்திரேலிய கண்காணிப்பு விமானம் ஒன்று பெரும்பாலும் ஆண்களும், பெண்கள் மற்றும் குழந்தைகளுமாக சுமார் 55 பேர் வரை குறித்த படகின் மேல் தளத்தில் இருப்பதை அவதானித்துள்ளது.
பின்னர், இன்னொரு படகில் இருந்து விடுக்கப்பட்ட உதவி அழைப்பு தகவலையடுத்து, தேடுதல் நடத்தியும் மூழ்கிய படகை கண்டுபிடிக்க முடியவில்லை.
வெள்ளி இரவு கண்டுபிடிக்கப்பட்ட படகு மூழ்கிய இடத்திற்கு அருகே நேற்று சனிக்கிழமை பகல் 9 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் 4 பேரின் சடலங்கள் நேற்று மாலை கண்டுபிக்கப்பட்டுள்ளன.
காணாமற்போன ஏனைய அகதிகளைத் தேடும்பணி தொடர்கிறது.
எனினும் கண்டுபிடிக்கப்பட்டு கடலில் மிதக்கும் 13 சடலங்களும் இன்னமும் மீட்கப்படவில்லை என்று அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னர் வெளியிட்ட செய்தி

Geen opmerkingen:

Een reactie posten