[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 11:01.02 AM GMT ]
தனது தாய் மற்றும் சகோதரனை தாக்கியதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்தே இவர் மே மாதம் 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
பாடசாலைகளில் தம்மை ஆசிரியர்களாக இணைக்காதமைக்கு பழி தீர்க்கும் நடவடிக்கையாகவே வன்னியில் மாணவச் சிறார்களை இராணும் துஷ்பிரயோகம் செய்து சிதைப்பதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மறைந்த ரோஹன விஜயவீரவின் மனைவி செய்த முறைப்பாட்டையடுத்தே அவரது மகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட அவரை வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் அன்றையதினமே ஆஜர்படுத்திய போது அவரை இன்று 3 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் அன்று உத்தரவிட்டிருந்தார்.
வன்னியில் மாணவர்கள் மீது இராணுவம் துஷ்பிரயோகம்! ஆசிரியர்களாக இணைக்காதமைக்கு பழி தீர்க்கும் நடவடிக்கை!
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 11:05.14 AM GMT ]
அண்மையில் நெடுங்கேணியில் 7 வயதுச் சிறுமியை இராணுவச் சிப்பாய் துஷ்பிரயோகம் செய்து சிதைத்தமையும்,
உடையார்கட்டில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவியை இராணுவச் சிப்பாய் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்காக கதறக் கதற பற்றைக்குள் இழுத்துச் சென்றமையும்,
இதற்கு முன்னரும் இராணுவச் சிப்பாய்களால் மாணவச் சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமையும்,
தம்மை ஆசிரியர்களாக பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளப்படாதமைக்கான பழி தீர்க்கும் நடவடிக்கையாகத்தான் இராணுவம் பாடசாலைச் சிறுமிகள் மீது இப்படியாக நடந்து கொள்வதாக மக்களால் அச்சம் வெளியிடப்படுகின்றது.
பாடசாலை மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக தம்மை ஆசிரியர்களாக இணைக்குமாறு கோரி இராணுவம் கற்பிப்பதற்கு அனுமதிக் கடிதங்களோடு சென்ற போது பிரதேச மக்கள் பலரினதும் பலமான எதிர்ப்பினால் கைவிடப்பட்டதுடன் இராணுவம் கடும் கோபமும் அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten