தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 8 juni 2013

இலங்கை பொலிஸ் விசாரணைகளின்போது மிளகாய் பொடியை கொட்டி சித்திரவதை!- ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு


கொக்கிளாய் தமிழர் நிலத்தை ஆக்கிரமித்த புத்தருக்கு விரைவில் திறப்பு விழா
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 07:07.42 AM GMT ]
முல்லைத்தீவு மாவட்டம் - கொக்கிளாய் கிராமத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து சிங்கள மக்களின் கால் தடமே இதுவரை பதியப்படாத இவ்விடத்தில் பாரிய பெளத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டது இவ விகாரை விரைவில் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
கொக்கிளாய் முகத்துவாரம பகுதியில் 1984 ஆம் ஆண்டின் பின்னர் தமிழ் மக்களிடைய நிலங்களை ஆக்கிரமித்து குடியேறி இருக்கும் சிங்கள மக்களுக்காக தனியாருக்கும் மற்றும் அரசாங்க வைத்தியசாலைக்கும் சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலம் பெளத்த பிக்கு ஒருவரால் அடாத்தாக பிடிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலத்திற்கு சொந்தமான தமிழர்கள் வழக்கு தொடர இந்த நிலையில் அவர்கள் அச்சுறுத்தபட்டதுடன், நீதிமன்றத்தை நாடாமலும் தடுக்கப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து குறித்த நிலத்தில் குடிசை அமைத்துக் கொண்ட பெளத்த பிக்கு அந்த நிலத்தில் அரச மரத்தின் கீழ் இருந்த இந்து விக்கிரகத்தை அகற்றியதுடன் அந்த இடத்தில் புத்தர் சிலை ஒன்றையும் வைத்தார்.
அந்தப் பகுதியை கொக்கிளாய் முகத்துவாரத்தில் குடியேற்றப்பட்டிருக்கும் சிங்கள மக்களை வழிபடும் இடமாகவும் மாற்றி அமைத்தார்.
எனினும் நிலத்திற்கு சொந்தமான மக்களுக்கு இதுவரை எந்த மாற்று வசதிகளும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை பொலிஸ் விசாரணைகளின்போது மிளகாய் பொடியை கொட்டி சித்திரவதை!- ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 08:45.24 AM GMT ]
இலங்கை பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளும்போது மிளகாய் பொடியை கண்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் கொட்டுதல் போன்ற மோசமான சித்திரவதை முறைகளைக் கையாள்வதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
அண்மையில் நடந்துள்ள 7 சித்திரவதை சம்பவங்களை சுட்டிக்காட்டி அந்த நிறுவனம் ஜனாதிபதி மஹிகிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ கருத்துது் தெரிவிக்கையில்,
அண்மையில் திருட்டுக் குற்றச்சாட்டு ஒன்றில் கைதான ஒருவர் கண்ணில் மிளகாய் தூள் கொட்டப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். இலங்கை பொலிஸ் விசாரணையில் இவ்வாறான சித்திரவதைகள் அதிகரித்து காணப்படுகிறன்றன. இதற்கு எம்மிடம் ஆதாரம் உள்ளது.
இந்த சித்திரவதைகள் குறித்து பொலிஸ் ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் முறைப்பாட்டு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளோம். ஆனால் எதுவித பலனும் கிடைக்கவில்லை.
அதனால்தான் 1978ம் ஆண்டு அரசியல் யாப்பின்படி சகல அதிகாரங்களும் படைத்த ஜனாதிபதிக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளோம். அவர் உத்தரவிட்டால்தான் எல்லாம் நடைபெறும்.
சித்திரவதைகள் குறித்து 400 சம்பவங்கள் எம்மிடம் பதிவாகியுள்ளன. இவற்றை புத்தகமாக வெளியிட உள்ளோம். சித்திரவதைகளுக்கு எதிரான ஐநா ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. ஆனால் இலங்கை பொலிஸ் அதனை மீறி செயற்படுகிறது.
சித்திரவதைகளுக்கு எதிரான ஐநா மாநாடு கடந்த 2011ஆண்டடில் நடந்தபோது இலங்கையில் பொலிஸ் சித்திரவதைகள் குறித்து முறைப்பாடு செய்தோம். சம்பந்தப்பட்டவர்களிடம் ஐநா அதிகாரிகள் விசாரணையும் மேற்கொண்டனர்.
எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறு முறைப்பாடு செய்வோம் என பசில் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதேவேளை, இந்தக்குற்றச்சாட்டை மறுத்துள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,  எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் பொலிஸார் விசாரணைகளில் கடைபிடிக்கும் முறைகளையே இலங்கை பொலிஸாரும் கடைபிடிக்கின்றனர்.சில நிறுவனங்கள் அடிப்படை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten