தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 8 juni 2013

மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்க சிங்கள பௌத்த அமைப்புக்கள் கூட்டணி


தமிழ் தேசிய கட்சிகள், சிவில் சமூகத்தினருக்கிடையிலான இன்றைய சந்திப்பு பிற்போடப்பட்டது!
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 06:15.31 AM GMT ]
தமிழ் தேசிய நிலைப்பாட்டிலுள்ள கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்தினருக்கிடையில் இன்று சனிக்கிழமை வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவிருந்த 4ம் கட்டச் சந்திப்பு பிற்போடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் மன்னார் மாவட்டத்தில் மன்னார் ஆஐர் இராயப்பு ஜோசப் தலமையில் சிவில் சமுகம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இந்தச் சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் பேரவை ஒன்றை நிறுவுவதெனவும், அதற்கு முன்பத hக இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் ஒரு பொது இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டதுடன், பொது இணக்கப்பாடு காண்பதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த குழுவினர் கடந்த மாதமே யாழ்ப்பாணத்திலும், பின்னர் கொழும்பிலும் கூடி விடயம் தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.
இந்நிலையில் 4ம் கட்ட அமர்வுக் கூட்டம் வவுனியா மாவட்டத்தில் இன்று(சனிக்கிழமை) நi டபெறவிருந்தது. இந்நிலையில் பொது இணக்கப்பாட்டை எற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டு கால அவகாசம் கேட்டுள்ள நிலையில், 4ம் அமர்வுக் கூட்டம் பிற்போடப்பட்டிருப்பதாக சிவில் சமூக வட்டாரங்கள் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றன.
மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்க சிங்கள பௌத்த அமைப்புக்கள் கூட்டணி
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 05:02.27 AM GMT ]
மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்க சிங்கள பௌத்த அமைப்புக்கள் கூட்டணி சேரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது,
மாகாணசபைகளுக்கு எதிரான தேசிய அமைப்பு என இந்த கூட்டணிக்கு பெயரிடப்பட்டுள்ளது.
சுமார் 37 அமைப்புக்கள் இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கவுள்ளன.
மாகாணசபை முறைமையை ரத்து செய்ய தேசிய ரீதியில் அழுத்தம் கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜாதிக ஹெல உறுமய, பொதுபலசேனா, தேசிய சங்க சம்மேளனம், ராவணா பலய உள்ளிட்ட பல்வேறு சிங்கள பௌத்த அமைப்புக்கள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்க உள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten