[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:51.48 PM GMT ]
யாழ்ப்பாணம் சுதுமலை வடக்கில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் எந்தவிதமான காரணமும் தெரிவிக்காது பொலிஸார் அத்துமீறி நுழைந்ததுடன், தேடுதலும் நடத்தியமை தொடர்பில் குறித்த அரச உத்தியோகத்தர், பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முறைப்பாடு செய்துள்ளார்.
சுதுமலை வடக்கு, மானிப்பாயில் உள்ள தனது வீட்டில் கடந்த 25ம் திகதி மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸார் தேடுதல் நடத்தினர்.
இலங்கையில் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஹோமகம நீதிபதி சுனில் அபயசிங்கவுக்கு பிணை வழங்க கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் மறுத்துள்ளது.
தான் ஒரு அரச உத்தியோகத்தர் என்று குறித்த நபர் தெரிவித்தும், அவரது அனுமதி பெறப்படாமலும் தேடுதல் நடத்தப்பட்டதாகவும் எனினும் தேடுதலுக்கான காரணம் எதுவும் இதுவரை கூறப்படவில்லை என்று கடந்த 27 அம் திகதி அரச உத்தியோகத்தர் முறைப்பாடு செய்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கும் விளக்கம் கேட்டு அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கனகராஜ் மேலும் தெரிவித்தார்.
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைதான நீதிபதிக்கு பிணை மறுப்பு
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:57.32 PM GMT ]
ஹோமகம நீதிபதியையும் அவருடைய மெய்ப் பாதுகாவலராக இருந்த பொலிஸ்காரர் ஒருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இந்த நீதிபதியைக் கைது செய்யும்போது ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாக நீதிமன்றம் விமர்சித்துள்ளது.
நீதிபதியை அச்சுறுத்தியும், நீதிபதியின் மெய்ப் பாதுகாவலராக இருந்த பொலிஸ்காரரை அடித்து துன்புறுத்தியும் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது என பிரதிவாதிகள் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டிருந்தது.
நீதிபதி கைதுசெய்யப்பட்ட விதத்தை கொழும்பு மஜிஸ்திரேட்டும் கண்டித்துள்ளார்.
நீதிமன்றத்தின் கௌரவத்துக்கு பாதிப்பில்லாமல் நியாயமான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஜூன் பத்தாம் திகதி வரை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒரு வழக்கில் சாதகமாகத் தீர்ப்பளிப்பதற்காக ஹோமகம நீதிபதி சுனில் அபயசிங்க லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுளளது குறிப்பிடத்தக்கது..
Geen opmerkingen:
Een reactie posten