இனிய பாரதியின் காரியாலயத்தை தோண்டுங்கள்….
இப்பேரணியானது இன்று காலையில் திருக்கோயில் மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது இவ்வார்ப்பாட்டத்திற்கு த.தே.கூட்டமைப்பின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் மற்றும் த.தே.கூட்டமைப்பின் பிரதேசசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
அங்கு கூடியிருந்த மக்கள் இனியபாரதியை உடன் கைது செய்யுங்கள் இதுவரை காலமும் பாரதியும் அவரோடு சேர்ந்து இயங்கிய இராணுவப்புலனாய்வாரள்களும் செய்த அட்டூழியங்களுக்கு தீர்வைப்பெற்றுத்தாருங்கள் என்றும் கடந்தகலங்களில் தங்களது உறவுகள்
கொன்று குவித்த அனைத்திற்கும் பாரதியே பொறுப்பானவர் என்றும் இவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் இவ்வாரானவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று மக்கள் ஆர்ப்பாட்டத்தின்போது கோசமிட்டிருந்தார்கள்.
இதுவரை காலமும் எங்களது பிரச்சனைகளை வெளியே கொண்டு வரமுடியாமல் இருந்தது ஆனால் இந்த நாட்டிலே ஓரளவு சுமூக நிpலை இருப்பதன் காரணமாக இவரையும் இவருடன் சேர்ந்து இயங்கிய ஒட்டுக்குழுக்களையும் உடனடியாக கைது செய்து அவர்களுக்கான தண்டனையை வழங்க வேண்டும் எனவும் வீதியை மறித்து போராட்டம் நடத்தினார்கள்.
வீதியை மறித்து போராட்டம் நடத்தினார்கள்
முன்னாள் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே.புஷ்பகுமார் என்றழைக்கப்படும் இனிய பாரதியின் காரியாலயம் அமைந்துள்ள வளாகத்தில் புதைக்கப்பட்டவர்களின் எச்சங்களையும் அங்கு புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்களையும் தோண்டி எடுத்து விசாரணைகள் நடத்துமாறு கோரி மஜகர் கையளிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச மக்கள் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை கட்டத் தொகுதிக்கு முன்பாக புதன்கிழமை(18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின அம்பாறை மாவட்ட முன்னாள்; நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ரி.கலையரசன் ஆகியோரின் இவ் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடுசெய்திருந்தனர்.
இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன், அக்கரைப்பற்று,திருக்கோவில்,பொத்துவில் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.கே.கேமந்த டிக்கோவிட்டவிடம் மகஜரொன்றை கையளித்தார்.
இம்மகஜரிலே மேற்படி விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘மட்டக்களப்பு பிரதேசத்தில் பிறந்தவரும் தற்போது திருக்கோவில் வசிப்பவரும் முன்னாள் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே.புஸ்பகுமார் என்ற இனியபாரதி, தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் அம்பாறை மாவட்டத்தின் பொறுப்பாளராக இருந்த காலத்திலும் பின்னர், முன்னாள் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக இருந்த காலத்திலும் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட மற்றும் கடத்திச் செல்லப்பட்ட எங்களது உறவுகளை மீட்டுத்தருங்கள், அவரால் பலவந்தமாக ஏழைகளிடமிருந்து அபகரிக்கப்பட்ட உடமைகள், சொத்துக்களை மீட்டுத்தாருங்கள், அவர் இருந்த காரியாலயம் அமைந்துள்ள வளாகத்தில் புதைக்கப்பட்டவர்களின் எச்சங்களையும் அங்கு புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்களையும் தோண்டி எடுத்து நீதி விசாரணைகள் நடத்துங்கள், தற்போது அவர் வசிக்கின்ற திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தைக்கு அருகிலுள்ள வீட்டில் பதுங்கு குழியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் நகைகள் பற்றிய விசாரணைகளை நடத்துங்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இப்போராட்டம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆரம்பகட்ட போராட்டமாக இருப்பதுடன் தொடர்ந்து நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்’ அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் இதன்போது தெரிவித்தார். திருக்கோவில், தம்பிலுவில், ஆலையடிவேம்பு, கண்ணகிபுரம், பனங்காடு, வினாயகபுரம் போன்ற பிரதேசங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ‘பாரதியே நீ கடத்திச் சென்ற என் மகன் எங்;கே?’இ ‘சீலன் பிடித்துச் சென்ற பிள்ளைகள் எங்கே?’, ‘அடக்கு முறையால் அழித்து விட்டீரே எம் மக்களை’இ ‘அரசே? அடைத்து விடு பாரதியை சிறையில்’ போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இறுதியாக ஆர்ப்பாட்டக்காரர்கள், மாகாணசபை உறுப்பினர் இனிய பாரதியின் வீட்டை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இதன்போது, பொலிஸ் அத்தியட்சகர், இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் தலைமையகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் நீதியை பெற்றுத்தருவதாக்கவும் காணமல் போன உறவுகளிடம் வாக்குறுதி அழித்ததை அடுத்து ஆர்பாட்டக்காறர்கள் விலகிச் சென்றனர்.
http://www.jvpnews.com/srilanka/97932.html
கூட்டமைப்பிற்குள் இரு அணிகளா…??
அண்மைநாட்களாக கருத்துரீதியில் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் இரண்டு அணிகள் உருவாகி வருவது தொடர்பில் எமது செய்தித்தளத்தில் தொடர்ந்து குறிப்பிட்டுவரும் விவகாரத்தை மேலும் உறுதிசெய்வதாக இந்த நிலை அமைந்துள்ளது.
மைத்திரி அரசுடன் மிக நெருக்கத்தை பேணாமல், சற்ற எச்சரிக்கையுடன் தள்ளி நிற்கும் போக்கை கடைப்பிடித்து வரும் சுரேஷ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கூட்டமைப்பின் இரண்டாம் மட்ட தலைவர்கள் ஆரம்பம் முதலே புதிய அரசுடன் மிகவும் நெருக்கத்தை பேணவில்லை.
மாறாக, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரி வெளிப்படையான நெருக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். புதிய அரசுடன் இந்த இருவரும் நெருக்கத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், வடக்கு மாகாணசபை இளஅழிப்பு பிரேரணையை நிறைவேற்றியது. இந்த பிரேரணையை தள்ளிவைக்குமாறு இறுதிவரை சுமந்திரன் வடக்கு முதல்வரிடம் கோரிக்கை விடுத்தபடியிருந்த விடயமும் தற்போது வெளியாகியுள்ளது.
அண்மைக்காலமாக கூட்டமைப்பின் அரசியல முடிவுகள் தொடர்பில் இருதரப்பும் வேறுபட்ட கருத்துக்களை பகிரங்கத்தில் தெரிவித்து வருகின்றனர். ஒருதரப்பின் நிலைப்பாட்டை மறுதரப்பு விமர்சனம் செய்வதும் அடிக்கடி நடக்கின்றது.
இந்தநிலையில், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கை போர்க்குற்றச்சாட்டு அறிக்கை தள்ளிவைக்கப்பட்ட விவகாரத்திலும் இருதரப்பும் வேறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த விடயத்திற்கு தமது கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் உத்தியொகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேச்சந்திரன் தெரிவித்துள்ளார். “பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு நீதிகடைப்பதை இது தாமதிக்க செய்கிறது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இது பற்றிய எமது அதிருப்தியை சம்பந்தப்பட்ட சகல தரப்பினருக்கும் தெரியப்படுத்தவோம். அத்துடன், மனிதஉரிமைகள் பேரவையுடனான அவசர கலந்துரையாடல் ஒன்றிற்கு சந்தர்ப்பம் கோரவுள்ளோம்” என்றார்.
வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனும் இந்த விடயத்தில் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். குறிப்பிட்டபடி மார்ச் மாதத்தில் அறிக்கையை வெளியிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். “அறிக்கை எந்தவித காலதாமதமுமின்றி மார்ச் மாதம் 28ம் திகதிக்கு மேசைக்கு வர வேண்டும். சொன்னபடி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். தேவையெனில் அதன் உள்ளடக்கத்தை ஆறுமாதங்கள் தாமதித்து வெளியிடட்டும்.
அறிக்கை சமர்ப்பிப்பது தாமதமானால் காலக்கிரமத்தில் அது கைவிடப்படக்கூடிய அபாயமும் உள்ளது. செப்ரெம்பரில் வெளியிடப்படும் என்கிறார்கள். அதற்கு யார் உத்தரவாதம் தருகிறார்கள்?” என்றும் கேள்வியெழுப்பினார்.
ஆனால் மறுவளமாக சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் இந்த முடிவை ஆதரித்துள்ளனர். “தாமதிப்பதை நினைத்து கவலையடைய ஒன்றுமில்லை. தாமதிப்பது புதிய வாய்ப்புக்களை தரும். இதுவரை சாட்சி வழங்காதவர்கள் இந்த இடைவெளியில் சாட்சி வழங்கலாம். இதனால் மேலும் புதிய சாட்சியங்கள் வருவது நல்லதுதானே” என்றுள்ளார். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் இதேவிதமான கருத்தையே வெளியிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/97931.html
UN அறிக்கையை முன்வையுங்கள்! வலியுறுத்துகிறார் சி.வி
ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முதலமைச்சர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
“இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்புத் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்ற விசாரணை அறிக்கை மார்ச் மாதம் 28 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை அமர்வில் கண்டிப்பாக சமர்ப்பிக்கப்படுமென தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இருப்பினும் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் உள்ளிட்ட சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இவ் அறிக்கையை வெளியிடுவதனை காலம் தாழ்த்துமாறு சிலர் விடுத்த கோரிக்கையின் விளைவாக இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிடுவதை மேலும் ஆறு மாதம் ஒத்திவைக்க ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு விடயங்களுக்குப் பல சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட பலரின் முயற்சிகள் எல்லாம் காலம் கடத்தியே பயனற்றுப் போனதால் தமிழ் மக்கள் மனதில் ஒரு சலிப்புத் தன்மையுண்டு.
அதேபோல் தற்போது ஐ.நா.வை நம்பியிருக்கும் தமிழ் மக்கள் ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் அறிக்கை கண்டிப்பாக மார்ச் 28 ஆம் திகதியே வெளிவரவேண்டுமெனக் கோரி வந்துள்ளனர். தற்போது பிற்போடுவது உண்மையானால் வட மாகாண முதலமைச்சர் என்ற வகையில் நான் ஒன்றை மட்டும் கூறி வைக்கிறேன்.
ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தால் நியமிக்கப்பட்ட குழு மேற்கொண்ட விசாரணை அறிக்கை எந்தவித காலம் தாழ்த்தாது மார்ச் 28இல் வரவேண்டும். அதாவது சமர்ப்பிக்கப்பட்டு வேண்டுமானால் அதன் உள் அடக்கத்தை ஆறு மாதங்களின் பின் தெரிவிக்கலாம். ஏனெனில் அவ் அறிக்கையே வெளிவராமல் தாமதப்படுத்தி எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் போய்விடக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு.”
இவ்வாறு வடக்கு முதல்வர் தெரிவித்திருக்கின்றார்.
http://www.jvpnews.com/srilanka/97968.html
Geen opmerkingen:
Een reactie posten