தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 17 februari 2015

அறிக்கைதான் தாமதம்! ஆனால் அச்சுறுத்தல் ஓயவில்லை!

போட்சிட்டி தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கை நாளை வெளியாகும்?
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 04:49.31 PM GMT ]
கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டு வரும் சீன நிறுவனத்தின் போட்சிட்டி நிர்மாணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திட்டம் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் புதிய அரசாங்கம் அதனை ரத்து செய்ய தீர்மானித்திருந்தது.
எனினும் குறித்த திட்டத்தை மீளாய்வு செய்ததன் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்று நாளை 18ஆம் திகதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சீன நிறுவனம் குறித்த திட்டத்துக்காக அதிக நிதிகளை செலவழித்துள்ளது.
கருங்கற்களை கொண்டு கடல் பிரதேசம் நிலப்பரப்பாக மாற்றப்பட்டு சுமார் 230 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இந்த போட்சிட்டி அமைக்கப்படுகிறது.
இதில் விளையாட்டு, பாதைகள், நீர், மின்சாரம் உட்பட்ட அனைத்து வசதிகளையும் கொண்ட குடியிருப்புக்களும் வர்த்தக நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

அறிக்கைதான் தாமதம்! ஆனால் அச்சுறுத்தல் ஓயவில்லை!
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 09:55.37 PM GMT ]
இலங்கைக்கு எதிரான ஜெனீவா விசாரணை அறிக்கையைப் பிற்போடுவதற்கு ஐ. நா. மனித உரிமைப் பேரவை தீர்மானித்திருப்பதை வரவேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். 
எனினும் இதனால் இலங்கைக்கு எதிரான அச்சுறுத்தல் முற்றாக நீங்கவில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான யுத்த குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருந்தது. இதனை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க மனித உரிமை பேரவை தீர்மானித்திருப்பது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், விசாரணை அறிக் கையை பிற்போட நடவடிக்கை எடுத்தது குறித்து அரசாங்கத்திற்கு எமது பாராட்டை தெரிவிக்கிறோம். எந்த அரசாங்கம் எது செய்தாலும் நல்ல விடயங்களை வரவேற்க வேண்டும்.

விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டதால் எமது நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல் ஓய்ந்துவிட்டது என்று எண்ணிவிட முடியாது. இன்னும் அச்சுறுத்தல் இருக்கவே செய்கிறது.

வட மாகாண சபையில் சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனடிப்படையில், இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்துமாறு பல டயஸ்போரா அமைப்புகள் மனித உரிமை பேரவையை கோரியுள்ளன. எனவே எமக்கு எதிரான சர்வதேச அழுத்தங்கள் தொடர்ந்தும் இருக்கவே செய்கிறது என மேலும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSbSUno7C.html

Geen opmerkingen:

Een reactie posten