தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 19 februari 2015

காணாமல்போனோரை கண்டுபிடிக்கக் கோரி மட்டக்களப்பில் கையெழுத்துப் போராட்டம்

இலங்கை வெளிவிவகார அமைச்சருடனான பேச்சுவார்த்தை பயனளித்துள்ளது: ஐரோப்பிய ஒன்றியம்
[ வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2015, 06:19.47 AM GMT ]
இலங்கை வெளிவிவகார அமைச்சர் கடந்த வாரம் பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் இலங்கையின் மீன் உற்பத்திகளுக்கான இறக்குமதி தடை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை பயனளித்துள்ளதாக ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான மீன்பிடி, அறிக்கையிடப்படாத, அதிகாரமளிக்கப்படாத மீன்பிடி நடவடிக்கைகள் குறித்து இதன் போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் மீன்பிடித்துறையை நிர்வாக ரீதியில் கட்டுப்படுத்தவும் அதனை உரிய வகையில் முகாமைத்துவம் செய்யவும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இலங்கை இணங்கியதாக ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இலங்கையின் மீன் இறக்குமதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை நீக்கப்படலாம் என தெரியவருகிறது.


ஸ்ரீலங்கன் விமான சேவையில் மோசடி! - ஆராய குழு நியமனம்
[ வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2015, 06:45.59 AM GMT ]
ஸ்ரீலங்கன் விமான சேவையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள், மற்றும் முறையற்ற செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு நால்வரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி ஜே.சி வெலி அமுன தலைமையில் இக்குழு செயற்படவுள்ளதுடன், யூ.எச் பலிஹக்கார, பி.ஏ.டபிள்யூ அபேவர்த்தன, எம்.கே பண்டார ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பணிப்பாளர் குழு மற்றும் நிர்வாகம் ஆகியன, அதிகாரங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளமை தொடர்பிலும்,
விமானங்களை தவணைக் கொடுப்பனவில் பெற்றுக்கொள்ளல், மற்றும் கொள்வனவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பிலும் இக்குழு ஆராயவுள்ளது.
25 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களின் கொள்வனவு மற்றும் சேவைகள் தொடர்பான நடவடிக்கைகள், நிர்வாக சேவைகளை முன்னெடுப்பதில் உள்ள தடங்கல்கள் குறித்தும், இக்குழுவினால் ஆதாரங்கள் திரட்டப்படவுள்ளன.
அத்துடன் எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதிக்கு முன்னர் விசாரணைகளை நிறைவுசெய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.



காணாமல்போனோரை கண்டுபிடிக்கக் கோரி மட்டக்களப்பில் கையெழுத்துப் போராட்டம்
[ வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2015, 07:30.31 AM GMT ]
காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டோரை கண்டுபிடிக்குமாறு கோரி இன்று மட்டக்களப்பு நகரில் கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிரதான பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற கையெழுத்து போராட்டத்தின்போது பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கையெழுத்திட்டனர்.
முன்னிலை சோஷலிசக் கட்சியினால் இப்போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
குமார் குணரத்தினத்தின் அரசியல் உரிமையை பறிக்காதே, அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமல் போனவர்களையும் கடத்தப்பட்டவர்களையும் மீட்டுத்தரவேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதன்போது, குமார் குணரத்தினம் உட்பட நாடு கடத்தப்பட்ட அனைவரினதும் அரசியலில் ஈடுபடும் உரிமையை பறிக்காதே எனும் தலைப்பில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
முன்னிலை சோஷலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆர்.கே.இந்திரநாத், சம உரிமை இயக்கத்தின் தலைவர் ரி.கிருபாகரன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

http://www.tamilwin.com/show-RUmtyCSdSUnqyA.html

Geen opmerkingen:

Een reactie posten