தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 13 februari 2015

நாங்கள் கேட்பது தனிநாடு அல்ல செல்வராசா MP

சகோதரனின் பிள்ளைகளை விற்ற நபர் கைது


கம்பளையைச் சேர்ந்த நபரொருவேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

child-
child-1
http://www.jvpnews.com/srilanka/97337.html

மகிந்த அவமானப்படுத்தினார் மனம்திறந்தார் மைத்திரி

சிகரெட் பெட்டிகளில் புகைப்படங்களுடனான எச்சரிக்கை இடம்பெறவேண்டுமென தான் தெரிவித்ததை நியாயப்படுத்துமாறு சிலோன்டொபாகோ நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி தனக்கு உத்தரவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட நிறுவனம் எனக்கு எதிராக வழக்கு தொடுக்கும் என மகிந்த அச்சுறுத்தினார். அவ்வாறு அவர்கள் முன்னிலையில் அவர் நடந்துகொண்டது நியாயமற்றது என சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சக அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ள மைத்திரிபால சிறிசேன அவர்களே மிகமோசமாக ஊழல்களில் ஈடுபடுபவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்
http://www.jvpnews.com/srilanka/97325.html


நாங்கள் கேட்பது தனிநாடு அல்ல செல்வராசா MP

மட்டக்களப்பு யோசப் வாஸ்வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் எமது மாவட்டத்தின் கல்வி நடவடிக்ககளைச் பார்கின்றபோது நாங்கள் கல்வியிலே சற்றுப் பின்னடைந்திருப்பதைக் காண்கிறோம்.
எமது தமிழ் சமூகம் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நாட்டில் பீடித்திருந்த கொடிய யுத்தம் காரணமாக, கல்வியை மட்டும் இழக்கவில்லை. உடமைகள், உயிர்கள் எல்லாம் இழந்திருக்கின்றது. ஓர் இனத்தின் விடுதலைக்காகப் போராடியவர்கள்கள் ஒருபோதும் பயங்கரவாதிகளாகிவிட முடியாது. தென்னாபிரிக்காவிலே ஜனாதிபதியாக இருந்த நெல்சன் மண்டேலா, தனது கறுப்பின மக்களுக்காக ஆயுதம் ஏந்திப் போராடியவர்.
27 வருடங்கள் சிறையிலே அனுபவித்தவர். கடைசியாக பேச்சுவார்த்தை மூலம் தமது இனத்தின் அரசியலை மேம்படுத்தி தமக்கென்று ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்தியவர். நெல்சன் மண்டேலா அவர்களை ஒரு போதும் உலகத்திலே வாழுகின்ற எந்த சமூகமாக இருந்தாலும் அவரை போராளி என்றோ, பயங்கரவாதி என்றோ சொன்னது கிடையாது.
விடுதலை வீரன் என்று சொன்னார்களே தவிர பயங்கரவாதி என்று உச்சரிக்க விரும்பவில்லை. அதே போன்றுதான் இலங்கைத் தீவில் கூட தமது இனத்துக்கு உரிமை கிடைக்கவில்லை என்று ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் பயங்கரவாதிகளாக மாறிவிட முடியாது.
அவர்கள் விடுதலை வீரர்களாக உச்சரிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால், 2009களில் கொடூரப் போர் மௌனித்து விட்டாலும், அதன் பின்னர் உண்மையான பயங்கரவாதம் ஒன்று இருந்தது. அதுதான் அரச பயங்கரவாதம், இந்த அரச பயங்கரவாதத்தினால் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதிவரை நம் இனத்தைச் சேர்ந்த எத்தனை இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள், எத்தனை இளைஞர்கள் காணாமல் போனார்கள்.
காணாமல் போனவர்கள் இருக்கிறார்களா, இல்லையா என்று தெரியாமல் அவர்களது பெற்றோர், உறவினர்கள் தேடிவருகின்றனர் அந்த வகையில் அரச பயங்கரவாதம் ஒன்று இந்த நாட்டில் இருந்தது என்பதனை மறந்து விடமுடியாது. இன்று ஓரளவுக்கு இந்த அரச பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் அதற்கான தீர்வுகள் கொண்டு வரப்படும் என்ற பச்சைக் கொடி புதிய அரசாங்கத்தினால் காட்டப்பட்டிருக்கிறது.
அது நடக்குமா அல்லது நடக்காமல் விடுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஜனவரி 8ஆம் திகதி முதல் பயங்கரவாதம் இல்லாத வேட்கையில் நாம் இருப்பதை நாங்களாகவே உணர்கிறோம். இன்று நாங்கள் பயங்கரவாதம் இல்லாத ஒரு சமாதானத்தை அடைந்திருக்கிறோம். இந்த நாட்டில் முழுமையான சமாதானம் மலரவேண்டுமாக இருந்தால் தமிழர்களது அபிலாஷகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.
கடந்த 65 – 70 ஆண்டுகளாக தமிழர்களது உரிமைகள் வழங்கப்படாமையினால்தான் நாடே பற்றியெறிந்தது. கடந்தகால அரசுகள் தமிழ் மக்களது உரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க மறந்துவிட்டார்கள், அவ்வாறு தீர்த்திருந்தால் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான மக்கள் இறந்திருக்கமாட்டார்கள். அபிலாசைகள் தீரும்வரை அது எந்த அரசாக இருந்தாலும் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போராடிக் கொண்டே இருக்கும்.


நாங்கள் தனிநாடு கேட்கவில்லை, நாங்கள் கேட்பது எல்லாம் இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் இனம் சுதந்திரமாக வாழ்வதற்கான அதிகாரப்பரவலாக்கலேயே. அந்த அதிகாரப்பரவலாக்கல் எந்த வழிமுறையில் இருந்தாலும் அதனைப் பெறுவதற்குத் தயாராக இருக்கிறோம். – என்றார்.Selvarajah MP
http://www.jvpnews.com/srilanka/97346.html

Geen opmerkingen:

Een reactie posten