இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தில் சில அதிரடி மாற்றங்களை கொண்டுவர உள்ளார்கள். ஒரு கட்சியின் கீழ் , அல்லது ஒரு குழுவின் கீழ் போட்டியிட்டு பாராளுமன்ற பதவியை பெறும் நபர் அந்தக் கட்சியை விட்டு தாவினால் அவர் பாராளுமன்ற பதவி பறிக்கப்படும் என்ற சட்டம் இலங்கையில் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்காக சட்ட வரைபுகளை ஜனாதிபதி செயலகம் தீட்டி வருகிறது என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. அத்தோடு பாராளுமன்றின் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாக குறைக்கப்படவுள்ளது.
மேலும் முப்படைகளின் தளபதியாக ஜனாதிபதி செயற்படுவார் எனவும், பிரதமரின் ஆலோசனைகளுக்கு அமைய ஜனாதிபதி செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும், பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்களின் உச்ச வரம்பு எண்ணிக்கை 40 ஆகவும் வரையறுக்கப்பட உள்ளது. அரசியல் சாசன சட்டத் திருத்தங்களின் போது இந்த விடயமும் உள்ளடக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.athirvu.com/newsdetail/2215.html
Geen opmerkingen:
Een reactie posten