தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 februari 2015

மகிந்தரின் கைதுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது: இனி என்ன நடக்கவிருக்கிறது ?



இதுவரை காலமும் மகிந்த ராஜபக்ஷ மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தும் , அதனை விசாரிப்பது இல்லை என்ற போக்கில் ரணில் அரசாங்கம் இருந்து வந்தது. இன் நிலை ரெம்ப நாள் நீடிக்கவில்லை போல இருக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ஒரு காரியம் நிறைவேற இருக்கிறது போல உள்ளது. அது என்னவென்றால் மகிந்தரின் சொத்துக் குவிப்பு தொடர்பான விடையம் தான் என்கிறார்கள். இதுவரை காலமும் , முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு ஆணைக்குழு, காணமல் போனவர்கள் தொடர்பாக ஆணைக்குழு என்று பல ஆணைக்குழுக்களை மகிந்தர் நியமித்து காலம் கடத்தி வந்தார்.
தற்போது முதன் முறையாக அவருக்கு எதிராக விசாரணை நடத்த ஒரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. இது இழுத்தடிக்கும் ஆணைக்குழு அல்ல. விரைவாக ஒரு கால எல்லைக்குள் செயல்பட்டு, முறைகேடுகளை கண்டறியும் என்று கூறப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளால் வெளிநாடுகளில் ஓளித்துவைக்கப்பட்டுள்ள பெருந்தொகை பணத்தை மீட்கும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகவே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மகிந்தருக்கு வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களின் வெளிநாட்டு பதுக்கல்கள் தொடர்பாக இந்த ஆணைக்குழு ஆராய்ந்து தனது அறிக்கையை சமர்பிக்கும். வருமானத்திற்கு அதிகமாக சொத்து மகிந்தரிடம் இருக்கிறது என்று தான் அறிக்கை வெளிவரும். அப்படி வந்தால் என்ன நடக்கும் ? என்பதனை பொறுத்திருந்து தான் பார்கவேண்டும்.
http://www.athirvu.com/newsdetail/2213.html



Geen opmerkingen:

Een reactie posten