மகிந்த ராஜபக்ஷவால் பாவிக்கப்பட்டதாக அறியப்படும் , தியான மற்றும் சோனா நிலையம் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1000 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான இந்த கட்டடத்தில் பல அதி நவீன வசதிகள் இருப்பதோடு சூப்பர் லக்ஷரி என்று சொல்லப்படும் அதி சொகுசு தியான நிலையமாகவும் இது உள்ளது. இம்பலாங்கொட என்னும் இடத்தில் தான் இது அமைந்துள்ளது. ஒரு சிறிய "மலைக் குகை" போல இது வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளே குளியல் அறை , தியான நிலையம் , பளிங்கு கற்கள் என்று பல உள்ளது. கட்டடத்தின் சுவரை பார்த்து எடைபோடவேண்டாம்.
அவை அனைத்துமே ஒருவகை பளிங்கு கற்களால் ஆனவை. அவை அதி விலை கூடியவை ஆகும். காடுகளில் முனிவர்கள் அமர்ந்து தியானம் செய்வது போல இங்கே அமர்ந்து தியானம் செய்யக்கூடிய மாதிரி ஒரு கல்லும் உள்ளது. அந்தக் கல்லை சூட்டாக்கவும் முடியும் என்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு மன்னர் எவ்வாறு எதேட்சை அதிகாரங்களோடு வாழ்வாரோ அதேபோல இலங்கையில் வாழ்ந்துள்ளார் மகிந்தார். பொலிசார் மற்றும் ஊடகவியலாளர்களை அழைத்துக்கொண்டு சென்று, குறித்த இடத்தை காட்டியுள்ளார் அமைச்சர் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க. 8 நிமிட வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது. பாருங்கள்.
http://www.athirvu.com/newsdetail/2216.html
Geen opmerkingen:
Een reactie posten