[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 08:23.50 AM GMT ]
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குருநாகல் பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவனும் மாணவியும் கடந்த புதன்கிழமை மாலை முதல் காணாமல் போயிருந்தனர்.
பாடசாலை சீருடையுடன் தெதுருஓயா பக்கமாக சென்ற இருவர், நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் அடிப்படையில் கடற்படையினருடன் இணைந்து பொலிஸாரும் பொதுமக்களும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அத்தேடுதலின் போது, மாணவனின் சடலம் நேற்று வியாழக்கிழமை காலையும், மாணவியின் சடலம் இன்றைய தினமும் மீட்கப்பட்டுள்ளது.
இவ்விருவரும் காதலர்கள் என்றும் அக்காதலுக்கு இருவீட்டார் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்தே அவ்விருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgwz.html
மகிந்த ராஜபக்ச என்னை அவமானப்படுத்தினார்: ஜனாதிபதி குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 08:42.27 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் இறுதியிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சிகரெட் பக்கட்டுகளில் எச்சரிக்கை புகைப்படங்கள் பதிக்கப்பட வேண்டும் என தான் தெரிவித்ததை நியாயப்படுத்துமாறு சிலோன் டொபாகோ நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி தனக்கு உத்தரவிட்டார் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறிப்பிட்ட நிறுவனம் எனக்கு எதிராக வழக்கு தொடுக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் இச்செயற்பாடு நியாயமற்றது என ஜனாதிபதி தெரிவித்துள்ளதோடு, சுகாதார அமைச்சு அதிகாரிகளே அதிகளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgw0.html
மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப்படுவதனை சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விரும்பவில்லை!
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 08:52.49 AM GMT ]
கடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை நடாத்த எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக 2001ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் காலத்தில் பதவி வகித்த அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களினால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் தொடர்பில், தற்போது எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சில உறுப்பினர்கள் விசாரணை நடத்த வேண்டுமென கோரி வருகின்றனர்.
எனினும், இந்த நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சியின் மற்றுமொரு தரப்பினர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்து பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டவர்களே அதிகளவில் இவ்வாறு அதிருப்தியடைந்துள்ளனர்.
தாம் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் மூடிமறைக்கப்படும் என்ற எண்ணத்தில் கடந்த அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட போதிலும். தற்போது மீளவும் விசாரணை நடத்தப்படுவது நெருக்கடிகளை ஏற்படுத்தும் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டவர்களை அரசியல் ரீதியாக நிர்க்கதியாக்கும் சூழ்ச்சித் திட்டமொன்று முன்வைக்கப்பட்டு வருவதாக குறித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgw1.html
மைத்திரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மோடி! வாழ்த்தும் தெரிவிப்பு
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 09:27.16 AM GMT ]
இதன்போது, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இந்தியா செல்லும் ஜனாதிபதி மற்றும் குழுவினரை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் மோடி, 1996ல் போன்று இம்முறையும் இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்றும், அதற்கான வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களின் 74 படகுகள் விடுவிப்பு
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 09:27.39 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன எதிர்வரும் 15ம் திகதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விடுவிக்கப்பட்ட இராமநாதபுரம், புதுக்கோட்டை,நாகை பூம்புகார் காரைக்கால் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மீனவ படகுகளை இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார்.
காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்ட துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 09:37.34 AM GMT ]
இவருடன் கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர்.
துறைமுகத்தை நேரில் அவதானித்த இந்தக் குழுவினர் அதன் அபிவிருத்தி சம்பந்தமாகவும் கலந்துரையாடினர்.
இதன்போது அங்கு ஊடகவியலாளர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் வட மாகாண இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுக்கமுடியும்.
அத்துடன் துறைமுகமும் அபிவிருத்தியடைந்து வடக்கின் ஏனைய கட்டமைப்புக்களும் விருத்திபெறும்.
இதேவேளை இங்குள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் மீள்குடியேற்றம் சம்பந்தமான நடவடிக்கைகளை ஜனாதிபதியும் பிரதமரும் முன்னெடுத்துள்ளனர்.
இந்த வகையில் கீரிமலைப் பகுதியில் உள்ள கடற்படை முகாமுக்கு அருகிலுள்ள காணிகள் விடயத்திலும் அவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgw5.html
58 லட்சம் வாக்குகள் மகிந்தவின் தனிப்பட்ட விருப்பு வாக்குகள் அல்ல: எதிர்க்கட்சித் தலைவர்
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 09:38.37 AM GMT ]
நீங்களும் மகிந்தவின் 58 லட்சம் வாக்குகளுடன் 18 ஆம் திகதி நுகேகொடவிற்கு வாருங்கள் என அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு பெருமளவிலான வாக்குகள் கிடைப்பது வழமையானது.
மகிந்த ராஜபக்சவின் செயற்பாடுகளினால் அவரை கவர்ந்தவர்கள் இருக்கின்றனர். அந்த 58 லட்சம் வாக்குகள் அதற்காக அவருக்கு கிடைத்த வாக்குகள் அல்ல எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தனது தந்தை மற்றும் எஸ்.டப்ளியூ. ஆர்.டி. பண்டாரநாயக்க ஆகியோர் இணைந்து கட்டியெழுப்பிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபடும் வகையில் மகிந்த ராஜபக்ச எப்போதும் செயற்பட மாட்டார் என்ற கடும் நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgw6.html
பாதை சீர்கேட்டை கண்டித்து காத்தான்குடியில் பாரிய ஆர்ப்பாட்டம்
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 09:41.53 AM GMT ]
பாலமுனை நடுவோடை ஜூம் ஆ பள்ளிவாயில் இடம்பெற்ற தொழுகையின் பின்னர் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி பாலமுனை பொலிஸ் காவலரன்வரை இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் நகர அவிருத்தி அமைச்சரிடம் கையளிப்பதற்கான மகஜர் அமைச்சர் றவூப் ஹக்கீமின் இணைப்புச்செயலாளர் யு.எல்.முபீனிடம் கையளிக்கப்பட்டது.
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இதில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgw7.html
குமார் குணரட்னத்தை 18ம் திகதி வரை நாடு கடத்த தடை - நீதிமன்றம் இன்று உத்தரவு
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 09:49.47 AM GMT ]
உச்ச நீதிமன்றம், குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் தம்மை நாடு கடத்த அரசாங்கம் முயற்சிப்பதாக குமார் குணரட்னம் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணைகள் மீளவும் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
குமார் குணரட்னத்தை 13ம் திகதி வரையில் நாடு கடத்தவோ அல்லது கைது செய்யவோ கூடாது என இதற்கு முன்னதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
வீசா காலாவதியாகியதன் பின்னர் நாட்டில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக குமார் குணரட்னம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரட்னம் 30 நாள் சுற்றுலா வீசா அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு வியஜம் செய்திருந்தார்.
குமார் குணரட்னம் அரசியலில் ஈடுபட அனுமதியளிக்க வேண்டுமெனவும் இலங்கையில் தங்கியிருக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் முன்னிலை சோசலிச கட்சி உள்ளிட்ட சில தரப்பினர் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgxy.html
மகிந்த மற்றும் கோத்தபாயவிடம் விசாரணை நடத்தப்படும்!– பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 09:54.25 AM GMT ]
சீனாவின் செய்தி நிறுவனமான சின்சூவாவிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை கூறியுள்ளார்.
இந்த சதித்திட்டம் தொடர்பான ஆரம்ப விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயவாளரிடம் விசாரணை நடத்த சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை காத்திருப்பதாகவும் கிடைத்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடமும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgxz.html
Geen opmerkingen:
Een reactie posten