சந்திரிக்காவுடன் தொடர்பு கொண்ட டக்ளஸ்
மகிந்தராஜபக்சவுக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்காவுடன் ஏற்கனவே டக்ளஸ் நெருங்கிய தொடர்புகளைப் பேணியிருந்தது அனைவருக்கும் தெரிந்தவிடயம். விடுதலைப்புலிகளின் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் லண்டனில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சந்திரிக்காவுக்கும் டக்ளசுக்கும் எம்மாதிரியான தொடர்புகள் இருக்கின்றது என்பதை ஆபாசம் கலந்த நகைச்சுவை ஒன்றின் மூலம் தெரிவி்த்திருந்தார்.
இந் நிலையில் சந்திரிக்கா பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் மகிந்தவுடன் சேர்ந்த டக்களஸ் அதன் பின்னர் சந்திரிக்காவின் தொடர்புகளைத் துண்டித்தார்.
தற்போது மகிந்த ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றப்பட்டதும் சந்திரிக்காவிடம் அதிகாரங்கள் சேரத்தொடங்கியதும் மீண்டும் டக்ளஸ் சந்திரிக்காவின் தொடர்பை ஏற்படுத்த முயன்று தற்போது அதில் வெற்றியும் கண்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இந்த வெற்றியின் ஒரு விளைவாகவே டக்ளஸ் குழுவினர் மைத்திரியை சந்திப்பதற்கு சந்திரிக்கா அனுமதி கொடுத்தார் எனத் தெரியவருகின்றது.
http://www.jvpnews.com/srilanka/97352.html
மாணவ சமூகத்தை குறிவைக்கும் இராணுவம்!
நேற்றைய தினமான வியாழக்கிழமை வசாவிளான் மத்திய கல்லூரியிலிருந்து உயர்தர மாணவர்களை அழைத்துக்கொணடு கல்லூரியின் அதிபர்,ஆசிரியர்களுடன் இராணுவத்தினரும் தெற்கு பயணித்துள்ளனர்.இது பயணம் முற்றுமுழுதாக இராணுவத்தினரி ஏற்பாடாகவே உள்ளதாக அறியமுடிகிறது.
சமாதான சுற்றுலா என்றபெயரில் கடந்த ஜனவரி மாதம் குருநாகலில் இருந்து பாடசாலை மாணவர்கள் வசாவிளான் மத்திய கல்லூரிக்கு வந்திருந்தனர். இதுவும் இராணுவத்தினரின் ஏற்பாடாகவே அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.கல்விச்செயர்பாடுகளில் இராணுவத்தினரின் தலையீடு தமக்கு ஒரு வித பயப்பீதியை ஏற்படுத்தியுள்ளதாக சுற்றுலாவுக்கு சென்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
முhணவ சமூகத்தை மூளை சலவை செய்யும் இம்முயற்சிக்கு படைத்தரப்புக்கு பாடசாலை அதிபரே பின்னின்று ஒத்துழைத்ததாக தெரியவருகின்றது.
முhணவ சமூகத்தை மூளை சலவை செய்யும் இம்முயற்சிக்கு படைத்தரப்புக்கு பாடசாலை அதிபரே பின்னின்று ஒத்துழைத்ததாக தெரியவருகின்றது.
http://www.jvpnews.com/srilanka/97366.html
கிளிநொச்சி மாவட்டத்தில் 94 இலட்சம் ரூபாக்களுக்கு நடந்தது என்ன?
நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் ஊடகவியலாளர் அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துக் கூறுகையில்:-
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளைப் பொறுத்த வரையில் மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் கைவிட்ட நிலமையே காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் பிரச்சனைகளை உரிய முறையில் அணுக யாரும் தயார் இல்லாத துர்ப்பாக்கிய நிலமையே தொடர் கதையாக காணப்படுகின்றது.
இந்த வகையில் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் பாதிப்புக்களுக்கு வழங்கவென நிதி வந்ததது.
அதில் கிளிநொச்சி உருத்திரபுரம் மற்றும் புளியம் பொக்கணை கமத்தொழில் நிலையங்களுக்கு உட்பட்ட விவசாயிகளுக்கான கொடுப்பனவாக வந்த 94 லட்சம் ரூபா பணம் இது வரையில் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
இது சம்ஷபந்தமாக கமத் தொழில் திணைக்கள உதவி ஆனணயாளரோ அன்றி மாவட்ட அரசாங்க அதிபரோ எந்த விதமான பதிலையும் வழங்க மறுத்து வருகின்றார்கள்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஏனைய கமத் தொழில் நிலையங்களுக்க உட்பட்ட விவசாயிகளுக்கான நட்ட ஈட்டுக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு மாவட்டதினுள்ளே இத்தகைய முரண்பாடுகள் எந் விவசாயிகளுக்கு காட்டப்படுகின்றது என்பது தெரியாது எனவும் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/97369.html
போரை நானே திட்டமிட்டேன் சரத் பொன்சேகா
வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி, இனவாதத்தை தூண்டி அரசியல் லாபங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தால் அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அவர் அவ்வாறு செய்வது நியாயமற்றது.
தரைவழி போரை நானே வடிவமைத்து திட்டமிட்டேன், படையணிகளுக்கு நானே உத்தரவு பிறப்பித்தேன். கீழ் மட்ட உறுப்பினர்களுக்கு நானே ஆணை வழங்கினேன். இந்த போராட்டத்தை நன்றாக கண்காணித்தேன். எனவே, மனித படுகொலைகள் இடம்பெறவில்லை என்பது எனக்குத் தெரியும்.
சிவில் மக்களை பாதுகாக்க நாம் முன்னின்று செயற்பட்டோம். 275,000 மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்தோம்.
சிவில் போர்களின் போது பொதுமக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதனை தவிர்க்க முடியாது என்ற போதிலும் எல்லா காரணிகளையும் கருத்திற் கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்நோக்கில் போர் செய்தோம்.
ஆனால் மக்களுக்கு பிழையான தகவல்களை வழங்கி அரசியல் லாபங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தால் அது பிழை. நான் அதனை அவருக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.அவர் வடக்கு மக்களின் நலனில் கரிசனை கொண்டிருந்தால், தெற்கு மக்களின் மனதில் சந்தேகம் எழுக்கூடிய வகையில் செயற்படக் கூடாது என தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/97372.html
Geen opmerkingen:
Een reactie posten