தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 13 februari 2015

அமெரிக்காவில் ஆங்கிலம் தெரியாததால் இந்தியருக்கு நேர்ந்த கொடுமை:

ஜனாதிபதியின் வீட்டில் சமைப்பது அவரது மனைவி!
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 07:37.24 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவருக்கு நெருக்கமான பெண் மருத்துவர் ஒருவர் அண்மையில் தெராலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
ஜனாதிபதி பதவிக்கு தெரிவாகியுள்ளதை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக அந்த மருத்துவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
சிறிது நேரம் ஜனாதிபதியுடன் உரையாடிய பின்னர், ஜனாதிபதியின் மனைவியிடம் பேச மருத்துவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது மனைவியுடன் இந்த நேரத்தில் பேச முடியாது எனவும் அவர் சமையலறையில் மதிய உணவை தயார் செய்து கொண்டிருப்பார் எனவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த பதிலை கேட்டு பிரபல அரசியல்வாதிகளின் குடும்பங்களுடன் தொடர்புகளை வைத்திருக்கும் மருத்துவர் கடும் ஆச்சரியமடைந்துள்ளதுடன் வீட்டில் வேலை செய்ய எவரும் இல்லையா என ஜனாதிபதியிடம் வினவியுள்ளார்.
எமது வீட்டு வேலைகளை நாங்களே செய்து கொள்வோம். எனக்கும் வீட்டில் இருப்பவர்களுக்கு மனைவிதான் சமைப்பார் எனவும் சமையலுக்கு தேவையானவற்றை வீட்டுத் தோட்டத்தில் பயிரிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgv3.html


அமெரிக்காவில் ஆங்கிலம் தெரியாததால் இந்தியருக்கு நேர்ந்த கொடுமை:
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 09:13.47 AM GMT ]
ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுரேஷ் பாய் படேல் (57) என்ற இந்தியர், அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், ஹண்ட்ஸ்வில்லே என்ற இடத்தில் பொறியாளர் வேலை பார்க்கும் தனது மகனை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த 6ம் திகதி, அந்த பகுதியில் சுரேஷ் பாய் படேல் சுற்றி திரிந்ததை பார்த்து சந்தேகித்த ஒருவர் பொலிசில் புகார் செய்துள்ளார்.
இதையடுத்து அவரை சுற்றி வளைத்த அமெரிக்க பொலிசார், அவரிடம் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டுள்ளனர். அவருக்கு ஆங்கிலம் தெரியாததால் பதில் அளிக்க முடியாமல், ‘நோ இங்கிலிஷ்’ என்று கூறி உள்ளார்.
அப்போது அவரை பொலிசார் ஒருவர் தரையில் தள்ளிவிட்டதால் அவர் முடங்கிப்போகிற அளவுக்கு காயம் அடைந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgw2.html

Geen opmerkingen:

Een reactie posten