தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 februari 2015

நாடு திரும்பும் நபர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்: முன்னிலை சோசலிசக் கட்சி



அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? ஈபிடிபி கலந்துரையாடல்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 12:45.00 PM GMT ]
எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக இன்று ஈபிடிபி கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளது.
கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதில், கடந்த காலங்களில் ஈபிடியினால் முன்னெடுக்கப்பட்டதும், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதுமான செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசியலில் அடுத்த கட்ட நகர்வு குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcexy.html
மகிந்த தலைமையில் தனிக் கட்சி தொடங்கும் தீவிர முனைப்பில் வீரவன்ஸ
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 12:54.02 PM GMT ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து விமல் வீரவன்ஸ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணிக் கட்சித் தலைவர்களான தினேஷ் குணவர்தன, திஸ்ஸ விதாரண, டியூ. குணசேகர ஆகியோருடன் அண்மையில் கலந்துரையாடியுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காது பேசப்பட்டு வரும் சில முன்னாள் அமைச்சர்களும், வீரவன்ஸவின் யோசனைக்கு சாதகமான பதில்களை வழங்கியுள்ளனர்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த யோசனை குறித்து திட்டவட்டமான முடிவு எதனையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி தனிக் கட்சி ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcexz.html
வாரியபொலவில் மேலும் 8 வாகனங்கள் மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 01:30.24 PM GMT ]
கடந்த தேர்தல் நடவடிக்கைகளின் போது முன்னைய அரசாங்கத்தினால் பயன்படுத்தப்பட்ட 8 வாகனங்களை இன்று பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாரியபொல, கலகெதர பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து இந்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களில், கெப் ரக வாகனங்கள் 5, மேட்டார் வாகனம் 2, லொறி ஒன்றும் என்பன அடங்குவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வாகனங்கள் முன்னாள் பொருளாதார அமைச்சுக்குச் சொந்தமானது என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcex0.html
விமான நிலைய வாடகை வாகனங்களின் கட்டணங்கள் குறைக்கப்பட்டன
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 01:45.04 PM GMT ]
கட்டுநாயக்க விமான நிலையத்தை மையமாக கொண்டு இயங்கும் வாடகை வாகன போக்குவரத்துச் சேவைகளின் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
வாடகை வாகனங்களின் கட்டணங்கள் 10 வீதமாக குறைக்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளை குறைத்தன் காரணமாக விமான நிலைய சூழலில் இருந்து செயற்படும் வாடகை வாகனங்களின் கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் இதனால் பயனடைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcex1.html
நாடு திரும்பும் நபர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்: முன்னிலை சோசலிசக் கட்சி
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 01:57.47 PM GMT ]
பல்வேறு காரணங்களால் இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளவர்கள் நாடு திரும்பினால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் புபுது ஜாகொட, நாட்டை விட்டுச் சென்றவர்களை மீண்டும் நாடு திரும்புமாறு அரசாங்கம் பகிரங்க அழைப்பை விடுத்துள்ளது. எனினும் அவ்வாறு நாடு திரும்பிய எமது கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரட்னத்தை அரசாங்கம் மீண்டும் நாடு கடத்த தயாராகி வருகிறது.
இதனால், மீண்டும் நாடு திரும்பும் நபர்கள் குறித்து அரசாங்கம் உரிய கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcex2.html

Geen opmerkingen:

Een reactie posten