[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 01:57.47 PM GMT ]
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் புபுது ஜாகொட, நாட்டை விட்டுச் சென்றவர்களை மீண்டும் நாடு திரும்புமாறு அரசாங்கம் பகிரங்க அழைப்பை விடுத்துள்ளது. எனினும் அவ்வாறு நாடு திரும்பிய எமது கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரட்னத்தை அரசாங்கம் மீண்டும் நாடு கடத்த தயாராகி வருகிறது.
இதனால், மீண்டும் நாடு திரும்பும் நபர்கள் குறித்து அரசாங்கம் உரிய கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcex2.html
நீர்த்தேக்கத்தில் பாய்ந்து காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 02:42.45 PM GMT ]
20 வயதுடைய மனோஜ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பொலிஸாரிடமிருந்து தப்பியோடிய இளைஞன் நேற்று மாலை 3 மணியளவில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 40 அடி உயரத்தில் இருந்து பாய்ந்து காணாமல் போயிருந்தார்.
இதனைக் கண்டித்து பிரதேச மக்கள் நேற்றும் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி-
- பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பி நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் எங்கே?- மக்கள் ஆர்ப்பாட்டம்
- தலவாக்கலை பிரதேசத்தில் ரயிலை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்- பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம்
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcex3.html
மரண பூமியாக்கப்பட்ட இலங்கைக்கு ஈழ அகதிகளை அனுப்பக் கூடாது: மதிமுக தீர்மானம்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 03:07.49 PM GMT ]
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 23வது பொதுக்குழு இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது.
இதன்போது, இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக மதிமுக தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
நிறைவேற்றட்டப்பட்ட தீர்மானங்களின் இலங்கை தொடர்பானவை பின்வருமாறு,
இலங்கை அகதிகளை அனுப்பக் கூடாது
இலங்கையில் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள ஈழத் தமிழர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியதால் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ச ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டு இருக்கின்றார்.
இலங்கையின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பொறுப்பு ஏற்ற பின்னர் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, ஜனவரி 19 ஆம் திகதி இந்தியாவுக்கு வந்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்களான ஏதிலிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்காக இலங்கை - இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தமிழக அரசின் சார்பில் பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவுறுத்தி இருக்கின்றது.
இதற்குப் பதில் அளித்துள்ள தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இலங்கையின் வடக்கு-கிழக்கு பகுதிகளில் நிலைமை இதுவரை சீராகவில்லை, இராணுவ முகாம்கள் இன்னமும் தமிழர்கள் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கின்றது.
எனவே, தமிழகத்தில் இருந்து ஈழத் தமிழ் ஏதிலிகளை இலங்கைக்கு அனுப்புவதற்கு இது உகந்த நேரம் அல்ல என்று மத்திய அரசுக்கு மிகச் சரியாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றார். ஈழத்தமிழ் அகதிகளை மைய அரசு இலங்கைக்கு அனுப்பக் கூடாது.
வக்கு-கிழக்கு மாகாணங்களில் ஈழத் தமிழர்களின் பூர்வீக தயாகப் பகுதியில் இருந்து இராணுவ முகாம்களை உடனடியாக அப்புறப்படுத்தவும், 2009 இல் நடைபெற்ற போரில் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு, சொந்த நிலங்களையும் வீடுகளையும் இழந்து நிற்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு அவர்களின் உடைமைகள் திரும்பக் கிடைக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.
மீனவர் பிரச்சினை
இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கும், அவர்களின் மீன்பிடி கருவிகள், படகுகளைப் பறிப்பதற்கும் முற்றுப்புள்ளி வைத்து, தமிழக மீனவர்கள் அச்சம் இன்றி மீன்பிடித் தொழில் நடத்தவும், கச்சதீவு பகுதியில் மீன்பிடி வலைகளை உலர்த்துதல், ஓய்வு எடுக்கும் உரிமைகளை நிலைநாட்டவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 87 படகுகளை உடனடியாகத் திரும்பப் பெற இந்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை
இலங்கையின் பிரதமராகப் பொறுப்பு ஏற்று உள்ள ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் கூட்டு ஆட்சி முறையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஒற்றை ஆட்சி முறைதான் என்று வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார். புதிய அரசு ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்கப்போவது இல்லை.
இந்தப் பின்னணியில் இலங்கை அரசும், இந்தியாவின் நரேந்திர மோடி அரசும் கூட்டாகச் சதித்திட்டம் வகுக்கின்றன.
மார்ச் மாதத்தில் நடைபெற இருக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கை அரசின் இனக்கொலைக் குற்றத்திற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள விடாமல் தடுப்பதற்காகவே தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்ப நரேந்திர மோடி அரசு முனைந்துள்ள துரோகம் கண்டனத்திற்குரியது ஆகும்.
தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளை தமிழர்களின் மரணபூமியாக்கப்பட்ட இலங்கைக்கு அனுப்ப முயலும் நடவடிக்கையை இந்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
இலங்கையின் புதிய அதிபர் இந்தியா வருவதற்கும், மார்ச் மாதத்தில் இந்தியப் பிரதமர் மோடி இலங்கை செல்வதற்கும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடும், உலக நாடுகளை ஏமாற்றி, மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை அரசுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்காகத்தான் என்பதே உண்மை ஆகும்.
தமிழ் இனக் கொலை புரிந்த ராஜபக்ச கூட்டத்தை, அனைத்து உலக நீதிமன்றக் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதையும், பொது வாக்கெடுப்பு மூலம் சுதந்திரத் தமிழ் ஈழம் அமைப்பதையும் ஒரே இலக்காகக் கொண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடும்.
தமிழகத்திலும் தரணியிலும் இதற்கான ஆதரவைத் திரட்டுகின்ற பணியில் ஈடுபடுத்துவது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcex4.html
Geen opmerkingen:
Een reactie posten